மகத்தான யுத்த வீரனாகிய தாவீது THIS GREAT WARRIOR, DAVID சிகாகோ, இல்லினாய்ஸ், அமெரிக்கா 55-01-18 1. ...நம்பிடுவாய், நம்பிடுவாய், நம்பிடுவாய், யாவும் கைகூடிடும், நம்பிடுவாய். நாம் ஜெபம் செய்வோம். எங்கள் பரலோகப் பிதாவே, அந்தப் பாடலானது எங்களுக்கு ஏதோவொன்றைச் செய்வதாகத் தோன்றுகையில், இந்த உலகத்திலுள்ள தேசங்கள் முழுவதும், நாங்கள் அதை அநேக வித்தியாசமான மொழிகளில் கேட்டிருக்கிறோம். ஆப்பிரிக்க பழங்குடியினரிடத்திலும்; தண்ணீருக்கு மறுகரையில் உள்ள இந்தியாவிற்குள்ளும்; அநேக வித்தியாசமான மதங்கள்; ஐரோப்பா முழுவதும், அது “நம்பிடுவாய்” (Only Believe) என்று அழைக்கப்படுகிறது. இப்பொழுது, இதோ நாங்கள் இந்த அழகான பெரிய சிகாகோ பட்டணத்தில் இன்றிரவு நின்று கொண்டு, இன்னுமாக, “நம்பிடுவாய்” (Only Believe) என்று பாடிக் கொண்டிருக்கிறோம். பரலோகப் பிதாவே, இன்றிரவு எங்களுக்கு ஒரு மகத்தான இரவாக இருக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம்; இன்றிரவு இங்கே உள்ளேயிருக்கும் ஒவ்வொரு தனி நபரும் தங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் தாமே இறங்கி வந்து, இருதயங்களைப் பற்றி பிடித்து, தேவனுடைய அன்பை ஜனங்களுக்கு பகிரங்கமாக வெளிப்படுத்துவாராக. பிதாவே, கடினமான இருதயங்களை முழுவதும் இனிமையாக ஆக்குவாராக. தேவனுடைய வார்த்தையை அங்கே உள்ளே வைப்பாராக, பிறகு அதில் என்ன வைக்கப்பட்டிருந்தாலும், இரட்சிப்பின் மரத்தின் மூலமாக அது நீளமாக வளருவது மட்டுமாக, அது தாமே விசுவாசத்தைக் கொண்டு தண்ணீர் பாய்ச்சப்படுவதாக. இதை அருளும், பிதாவே, அது ஆத்துமாவின் இரட்சிப்பாகவோ, அல்லது சரீர இரட்சிப்பாகவோ இருக்கலாம். நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். 2. உங்கள் ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது அடுத்து வருகிற சில இரவுகள், ஞாயிற்றுக்கிழமை வரையில், இங்கே கூடாரத்தில் நம்முடைய ஆராதனைகள் தொடர்ந்து நடக்கும் என்று நம்புகிறேன், ஒரு இரவைத் தவிர மற்ற எல்லா இரவுகளும் நடக்கும், அந்த ஒரு இரவு சனிக்கிழமை இரவு என்று நினைக்கிறேன். அப்போது, அது நம்மை விட்டு நீங்கும், இங்கே புதன் கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை. கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கவும், நம்மை சந்திக்கும்படியாகவும் நாம் எதிர்பார்ப்போடு வருகிறோம். இந்தக் காலையில், எனக்கு ஏதோவொருவிதமாக கொஞ்சம் காற்று வீச்சு இருந்தது, என்னால்..... கஷ்டமாக இருந்தது. எனக்கு அப்படிப்பட்ட சளி இருந்தது. ஆனால் இன்றிரவோ, அது போய் விட்டது; நான் அதற்காக நன்றி உள்ளவனாயிருக்கிறேன். கர்த்தருடைய நன்மைகளுக்காக நான் நல்ல கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன். மேலும் இப்பொழுது, நாம் வார்த்தையிலிருந்து கொஞ்சம் வாசிப்போம். இது வாரத்தின் முதலாவது இரவாக இருக்கிறது, அப்படியே தொடங்குகிறது மேலும் மற்றவைகள், ஏன், நாம் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்வோம். நல்லது, நாம் கடந்த இரவில் எடுத்துக்கொண்டது போல அவ்வளவு நேரம் அல்ல, ஆனால் வெறுமனே குறுகிய நேரத்தை எடுத்துக்கொள்வோம். எப்படியும் நாம் உரிய காலம் கடந்து தாமதமாகத்தான் இருக்கிறோம். இது ஏற்கனவே இருபது நிமிடங்கள் ஆகி விட்டன - ஒன்பது மணிக்கு இருபது நிமிடங்கள் இருக்கின்றன. கர்த்தருக்குச் சித்தமானால், ஒருக்கால் ஒன்பது மணிவாக்கில், நாம் ஜெபவரிசையை ஆரம்பிக்கலாம். 3. இப்பொழுது, 1 சாமுவேல் 17-வது அதிகாரத்தில், வேத வாக்கியத்தை வாசிக்கும்படியாக என்னோடு கூட திருப்புங்கள், நீங்கள் என்னோடு வாசிக்கும்படியாக, மிகவும் வாஞ்சை உள்ளவர்களாக இருந்தால், 31-ம் வசனத்தோடு துவங்குவோம். தாவீது சொன்ன வார்த்தைகளை அவர்கள் கேட்டு, அதைச் சவுலின் சமுகத்தில் அறிவித்தார்கள்; அப்பொழுது அவன் அவனை அழைப்பித்தான். தாவீது, சவுலை நோக்கி: இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியது இல்லை; உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம் பண்ணுவேன் என்றான். அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம் பண்ண உன்னால் ஆகாது; நீ இளைஞன், அவனோ தன் சிறுவயது முதல் யுத்தவீரன் என்றான். தாவீது சவுலைப் பார்த்து: உம்முடைய அடியான் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிற போது, ஒரு விசை ஒரு சிங்கமும், ஒருவிசை ஒரு கரடியும் வந்து, மந்தையில் இருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக் கொண்டது. நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என் மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்று போட்டேன். அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே, என்றான். கர்த்தர் தாமே இந்த வார்த்தையோடு தம்முடைய ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. இப்பொழுது நான் சற்று நேரம் மகத்தான மாவீரனாகிய தாவீது (This Great Warrior, David) என்பதின் பேரில் பேச விரும்புகிறேன். நாளை இரவு, தேவனுக்குச் சித்தமானால், மகத்தான யுத்த வீரனாகிய யோசுவா என்பதின் பேரில் பேச விரும்புகிறேன். 4. இப்பொழுது, இன்றிரவு, தாவீதுடைய இரவாக இருக்கிறது, தாவீது எப்போதுமே என்னுடைய இருதயத்தில் ஒரு உண்மையான இடத்தைக் கொண்டிருக்கிறான், ஏனென்றால் தேவன் அவனிடம், "தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதனாக இருந்ததாக” கூறிய வண்ணமாகவே, அவன் - அவன் அவ்வாறு தான் இருந்தான். ஜனங்கள் தாங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிந்திருக்கிற ஜனங்களைக் காண நான் விரும்புகிறேன். ஜனங்கள், தாங்கள் யாராய் இருந்தாலும், அவர்கள் எந்த மதத்தைச் (religion) சேர்ந்தவர்களாக இருந்தாலும், அல்லது அவர்கள் எந்த பொருளின் பேரில் பேசிக் கொண்டிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அவர்கள் தாங்கள் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்திருப்பார்களானால், அவர்கள் பேசுவதைக் கேட்கவே நான் விரும்புகிறேன். நான்-நான் அதை விரும்புகிறேன். தாவீது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறிய பையனாக இருந்தான்; அவன் பெத்லெகேமில் தன்னுடைய தகப்பனோடு கூட வசித்து வந்தான், அவனுடைய தகப்பன் எப்பிராயீம் கோத்திரத்திலிருந்து வந்திருந்தான். இந்த தகப்பனாகிய ஈசா உயர்குடியில் பிறந்த சிறு மனிதனாக இருந்தான், தாவீது இந்தத் தகப்பனுக்கு எட்டாவது பிள்ளையாக இருந்தான், ஈசா ஒரு எப்பிராயீமனாயிருந்தான். தாவீது இங்கே இந்த பூமியின் மேல் பிறந்த மிக ஆரம்ப காலத்திலேயே, தேவன் தன்னோடு இருந்தார் என்பதை அறிந்திருந்தான். அவன் எப்பொழுதாவது ஆசீர்வதிக்கப்படுவதற்கோ, அல்லது அபிஷேகம் பண்ணப்படுவதற்கு முன்பாகவே, தேவன் தன்னோடு கூட இருந்தார் என்பதை அறிந்திருந்தான். அந்தக் கதையை நீங்கள் மிக உன்னிப்பாக கவனிப்பீர்களாால், தேவன் எப்படியாக.... கடந்த இரவிலும், நாம் அதே காரியத்தின் பேரிலேயே, வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதல் இல்லாமலேயே கொடுக்கப்படுகின்றன என்பதன் பேரில் பேசிக் கொண்டு இருந்தோம். அந்தக் காரியத்தை அவ்வண்ணமாகச் செய்வது என்பது தேவனுடைய தெரிந்து கொள்ளுதலாகவும் அவருடைய முன்னறிவாகவும் இருக்கிறது. நமக்கு ஒரு வாஞ்சை இருக்குமானால், "விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, ஆனால் அது இரக்கம் காண்பிக்கிற தேவனாக இருக்கிறது" என்று வேதாகமம் கூறுகிறது. பாருங்கள்-? நீங்கள் விரும்புகிறீர்களா என்றோ, அல்லது விருப்பம் கொள்கிறீர்களா என்றோ, அல்லது உங்கள் வாஞ்சைகள் எங்கேயிருக்கின்றன என்றோ அல்ல, அது தேவனுடைய சித்தமா இல்லையா என்பதாகத் தான் அது இருக்கிறது. அப்படியானால் நாம் தேவனுடைய சித்தத்தை கண்டு கொண்டாக வேண்டும், அது அந்த பரிபூரண சித்தமாக இருக்குமானால், நாம் நம்முடைய விசுவாசத்தை அதில் வைத்து, "இது தான் அது" என்று கூறலாம். அப்பொழுது தேவனுடைய சித்தம் போகிற அந்த பாதையில் நாமும் சரியாக ஓட முடியும். 5. இப்பொழுது, இழக்கப்பட்டவர்களை இரட்சிக்க வேண்டும் என்பது தான் தேவனுடைய சித்தம் என்பது நமக்குத் தெரியும். வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்த வேண்டும் என்பதும் தேவனுடைய சித்தமாக இருக்கிறது என்று நமக்குத் தெரியும். இப்பொழுது, நாம் நம்மைத் தானே அவருடைய சித்தத்தில் பொருத்தி விட்டோம் என்றால், அது முடிந்து விட்டது. இன்றிரவு இந்தச் சிறு கூட்டத்தார்... இங்கே உள்ளே எத்தனை வியாதிப்பட்டுள்ள ஜனங்கள் இருக்கிறீர்கள், உங்கள் கரங்களைப் பார்ப்போம். ஜெபிக்கப்பட விரும்புகிற வியாதியஸ்தர்கள் எங்காவது இருந்தால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். இப்பொழுது, சற்று பாருங்கள், அங்கே எந்த... நாம் -நாம் இன்றிரவில் பூரண சுகத்தோடு வீட்டிற்குப் போக வேண்டும். மற்றவர்களைப் பாருங்கள்… நினைக்கிறேன், தற்செயலாக, நீங்கள் இன்னுமாக இங்கே இருப்பீர்களானால், அந்த ஜனங்களில் சிலர் தங்கள் சாட்சிகளை கூறியிருப்பார்கள். என்னே, தலை சிறந்த... அங்கே வெளியிலுள்ள ஜனங்கள், தங்களிடம் பேசப்பட்ட உடனே அல்லது அவர்கள் விசுவாசத்தைப் பெற்றுக்கொண்ட உடனே. கர்த்தர் அவர்களுக்காக என்ன செய்தார் என்பதை, சகோதரன் ஜோசப் அவர்களும் கூட அந்த சாட்சிகளைத் தம்முடைய பத்திரிகையில் வெளியிடும்படியாக, அவைகளைப் பெற்றுக் கொள்கிறார். கர்த்தர் எப்படியாக மகத்தான வல்லமையில் இறங்கி வந்து, அவர்களுக்குத் தம்மைத் தாமே வெளிப்படுத்தி, எல்லாவிதமான வியாதிகளை உடைய அவர்களைச் சுகப்படுத்தி, அவைகள் ஜனங்களை விட்டு போய் விட்டது என்பதை அவர் பத்திரிகையில் வெளியிடுகிறார். மருத்துவர்களாலும் கூட ஏற்கனவே கட்டுப்படுத்த முடியாத வியாதிகள், நாங்கள் சரியாக இங்கே சிகாகோவில் இருந்தது முதற் கொண்டு, கர்த்தர் அவர்களைச் சுகப்படுத்தி இருக்கிறார், அவர்கள் இப்பொழுது சுகமடைந்து விட்டார்கள். பாருங்கள்-? அவர்கள் இங்கே ஜீவனுள்ள சாட்சிகளாக இருக்கிறார்கள். அவர்கள் வீட்டிற்குப் போகும் போது, தங்கள் அன்பார்ந்தவர்கள் சுகமடைவதையும், மற்றும் எல்லாவற்றையும் காண்கிறார்கள், கர்த்தர் அதைப் பேசுகிற அந்த விதத்திலேயே. ஒலிநாடாவை பின்னால் ஓடவிட்டு, அவர் என்ன கூறுகிறார் என்று பார்த்து, அது சரியாக இல்லாமல் இருக்கிறதா என்று கவனியுங்கள். பாருங்கள், அவர் என்ன கூறுகிறாரோ அப்படியே அது இருக்கப் போகிறது. 6. மேலும் இப்பொழுது, தாவீது தெரிந்து கொள்ளப்படுதலின் மூலமாக, தன்னுடைய ஸ்தானத்தில் (positionally) பிறந்தான், தேவன், "வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதல் இன்றியே கொடுக்கப்படுகின்றன” என்று கூறியிருக்கிறார். அவன் கர்த்தருடைய தாசனாக (servant) தெரிந்து கொள்ளப்பட்டு, பிறந்தான். அவன் ஒரு - ஒரு சிறு பையனாக இருந்த போது, அந்நாளிலே, இஸ்ரவேலர் தேவனை விட்டுத் தூரமாகப் போயிருந்தார்கள். அவர்கள் வெளியே சென்று, தங்களுக்குத் தாங்களே ஒரு இராஜாவை தெரிந்து கொண்டார்கள். அவர்கள் மற்ற தேசத்தாரைப் போன்று, புறஜாதிகளைப் போன்று நடந்து கொள்ள விரும்பினார்கள். தேவன் தான் அவர்களுடைய இராஜாவாக இருந்தார், ஆனால் மற்ற ஜனங்களைப் போன்று அவர்கள் நடந்து கொள்ள விரும்பினார்கள். அப்போது தான் அவர்கள் தொல்லையில் அகப்பட்டார்கள். நீங்கள் எப்பொழுதெல்லாம் வேறு யாரோ ஒருவராக பாவனைச் செய்து கொள்ள பாசாங்கு செய்ய, போலியாக நடிக்க முயற்சிக்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் தொல்லையில் அகப்படுவதை எதிர் பாருங்கள். உங்களால்... சகோதரன் உப்சா வழக்கமாக ஒரு சிறு மேற்கோளுரையை (சுலோகத்தைக் கூறுவதுண்டு, "நீங்கள் இல்லாத ஒன்றாக உங்களால் இருக்க முடியாது” என்று அவர் கூறுவதுண்டு. அது சரியே. "நீங்கள் இல்லாத எதுவாகவும் உங்களால் இருக்க முடியாது. எனவே அதை அப்படியே உங்கள் மனதில் பதித்துக் கொள்ளுங்கள். எனவே நீங்கள் ஏதோவொன்றை பாவனைச் செய்ய முயற்சி செய்ய வரும் போது, ஏன், நீங்கள் வெறுமனே பாசாங்கு செய்து நடித்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள். அதைக் குறித்து தேவனுக்குத் தெரியும், ஜனங்களுக்கும் கூட அது தெரியும். எனவே நீங்கள் நீங்களாகவே இருப்பது தான் நல்லது. இஸ்ரவேலர் அந்த நிலைமையில் தரித்திருந்திருப்பார்களானால், ஆனால் அவர்களோ, "நல்லது, இப்பொழுது பாருங்கள். மற்ற தேசத்தாருக்கு ஒரு இராஜா இருக்கிறார், எனவே ஏன் நமக்கும் கூட ஒரு இராஜா இருக்கக் கூடாது-?” என்றார்கள். அது தான் பெந்தெகோஸ்தேயினராகிய உங்களுக்கும் சம்பவித்திருக்கிறது, நீங்கள், "நல்லது, மற்ற சபைகள், அவர்கள் எல்லாரும் படக்காட்சிகளுக்குப் போகிறார்களே, அவர்கள் - அவர்கள் தங்கள் தலைமயிர்களைக் கத்தரிக்கிறார்களே, அவர்கள் - அவர்கள் குட்டை உடைகளை அணிகிறார்களே, அவர்களும் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று தானே சொல்லுகிறார்கள், ஏன் நம்மாலும் அதைச் செய்ய முடியாது-?" என்று நினைக்கும் போது, உங்களுக்கும் அது தான் நடக்கிறது. அங்கே தான் காரியம். [சபையார், ஆமென்” என்று கூறுகிறார்கள் - ஆசிரியர்.) உங்களுக்கு நன்றி, நீங்கள் அதைக் கூறுவதைக் கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுக்கு நன்றி. அது சரியே. ஒரு வயதான மெதோடிஸ்டு பிரசங்கியார் வழக்கமாக, "நாம் தாழ்ப்பாள்களை இறக்கிவிட்டோம், நாம் பாவத்தோடு சமரசம் செய்து கொண்டோம்; நாம் தாழ்ப்பாள்களை இறக்கி விட்டோம், ஆடுகள் வெளியே போய் விட்டன, ஆனால் இந்த வெள்ளாடுகள் எப்படி உள்ளே வந்தன-?” என்ற பாடலைப் பாடுவதுண்டு. நீங்கள் தாழ்ப்பாள்களை இறக்கி விட்டு விட்டீர்கள், அது தான் - அது தான் அதைச் செய்கிறது. அது உண்மை . இப்பொழுது, நான் என்னிடம் ஒரு அளவு கோலை வைத்திருக்கிறேன் என்று நினைத்து விடாதீர்கள்; என்னிடம் அது கிடையாது. ஆனால் சுவிசேஷமானது உண்மையில் ஜனங்களைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும் போது, அது ஒரு நபருக்கு என்ன செய்கிறது என்பதை நான் - நான் கண்டிருக்கிறேன். அது உங்களை வித்தியாசமாக பார்க்கவும், வித்தியாசமாக நடந்து கொள்ளவும், வித்தியாசமாக உடையுடுத்திக் கொள்ளவும், வித்தியாசமாக நடக்கவும் செய்கிறது, அப்பொழுது நீங்கள் பாதை முழுவதும் தொடர்ந்து வித்தியாசமாகவே நடந்து கொள்ளுகிறீர்கள். அது சரியே. ஒரு முறை தாழ்ப்பாள்களை சற்றே இறக்கி விட்டு, அந்த வெள்ளாடுகள் எப்படி உள்ளே வருகின்றன என்று கவனித்துப் பாருங்கள். 7. ஆனால் இப்பொழுது, இஸ்ரவேலர்கள் மற்ற ஜனங்களைப் பாவனைச் செய்ய விரும்பினார்கள். அதைத் தான் சபையும் செய்ய விரும்புகிறது, பாவனை செய்ய விரும்பி, ஒரு பின்வாங்கிப் போன நிலையாக அது ஆகி விட்டது. அப்போது இந்த நிலையில், அவர்கள் என்ன செய்தார்கள்-? அவர்கள் தங்களுக்கு ஒரு இராஜாவைப் பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் இந்த இராஜாவைத் தெரிந்து கொண்டார்கள். அவர்கள் தங்களுடைய இராஜாவைக் கண்டுபிடிக்கும்படி போனார்கள், அவர்கள் அவ்வாறு கண்டு பிடித்த போது, அவர்கள் மிகப் பெரியதும், மிகவும் அழகானதுமான மனிதனைக் கண்டு பிடித்தார்கள், அவர்கள் மகத்தான பெரிய, ஏழு அடி உயரமுடைய கறுத்த மயிரடர்ந்த, கறுத்த பிரகாசமான கண்களை உடைய மனிதனை அவர்களால் கண்டு பிடிக்க முடிந்தது, அது ஜனங்களுக்கு கவர்ச்சிகரமாக இருந்திருக்கும். அவர்கள், அவர் ஒரு அற்புதமான இராஜாவாக இருப்பார்” என்று நினைத்தார்கள். ஆனால் தேவனோ சாமுவேலிடம், "மனிதன் வெளிப்புற தோற்றத்தைப் பார்க்கிறான், ஆனால் தேவனோ இருதயத்தைப் பார்க்கிறார்” என்று கூறியவண்ணமாக. இஸ்ரவேலர் தங்கள் இராஜாவைத் தெரிந்து கொண்ட போது, அவர்கள் மகத்தான பெரிய அழகானதும், பெரிய தோள்களை உடைய பலசாலியாக தோற்றமளிக்கிறதும், தன்னுடைய சேனை எல்லாவற்றிற்கும் மேலாக நேராக நிற்கிற தலையையும் புயங்களையும் உடையவனைத் தான் விரும்பினார்கள். ஆனால் தேவன் அவர்களுக்காக தம்முடைய இராஜாவைத் தேர்ந்தெடுத்த போது, ஒரு சிறிய சிவந்த, வாலிபப்பருவமாக தோற்றமளித்த, அந்த விதமான ஒரு மனிதனை, ஒரு சிறிய பெண் தன்மை கொண்ட சிறுவனைப் போன்றவனைத் தான் அவர் தெரிந்து கொண்டார். அது தான் அதைக் குறித்த தேவனுடைய தெரிந்தெடுத்தலாக இருந்தது. என்னவொரு வித்தியாசம். அதிலுள்ள வித்தியாசத்தைப் பார்த்தீர்களா-? சில சமயங்களில் தேவன் அந்த விதமாகத்தான் காரியங்களைச் செய்கிறார். மிகவும் முரண்பாடாக இருக்கும் அப்படிப்பட்ட விதத்தில் தான் அவர் அதைச் செய்கிறார். நாம் என்ன நினைக்கிறோமோ அதிலிருந்து மிகவும் வித்தியாசமாக அது இருக்கிறது. 8. மருத்துவர், "நல்லது, அந்த நோயாளி காசநோயினால் மரிக்கப் போகிறார்” என்று கூறுகிறார். அவர்கள் எப்பொழுதாகிலும் எப்படித் தான் சுகத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்-? அது மருத்துவரின் அபிப்ராயம். அவர் அதை மருத்துவ பார்வையில் இருந்து பார்க்கிறார். ஆனால் தேவனுடைய பார்வையில் இருந்தல்ல. “நானே உன்னைச் சுகமாக்குகிற கர்த்தர்.” அது தான் அடுத்த காரியம். பாருங்கள்-? ஒருவர் அதை இந்த விதத்திலிருந்து நோக்குகிறார்; ஒருவர் அதை புத்தியின் அறிவிலிருந்து நோக்குகிறார், மற்றவரோ அதை ஆவிக்குரிய புலனிலிருந்து நோக்குகிறார். எனவே நீங்கள் உங்கள் விசுவாசத்தை எந்தவிதத்தில் அஸ்திவாரப்படுத்துகிறீர்கள் என்பதாக இருக்கிறது. அது முடிந்து விட்டது என்று மருத்துவர் கூற, நீங்கள் அதை விசுவாசிப்பீர்களானால், அதோடு அது முடிந்து விடுகிறது. அது சரியே. ஆனால் அது முடிந்து விட்டது என்று மருத்தவர் கூறினாலும், தேவன் வித்தியாசமான ஏதோவொன்றைக் கூறினதின் நிமித்தமாக, நீங்கள் மருத்துவர் கூறுவதை விசுவாசியாமல் இருப்பீர்களானால், என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். பாருங்கள்-? நீங்கள் உங்களைத் தானே எந்த வழியில் போக அனுமதிக்கிறீர்கள் என்பதைத் தான் அது பொறுத்துள்ளது. நீங்கள் யாரிடம் உங்கள் சரீரத்தின் பாகத்தை ஒப்படைத்து விடுகிறீர்களோ, அவருடைய ஊழியக்காரன் தான் நீங்கள். 9. இப்பொழுது, மருத்துவர்களுக்கு விரோதமாக எதுவுமில்லை. நான் மருத்துவர்களை நம்புகிறேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்... நான்.... நான் இதைக் கூறுகிறேன், ஏனென்றால் அநேக நேரங்களில் ஜனங்கள் சுற்றிலும் சென்று, "நல்லது, ஒரு மனிதன் மருத்துவரைக் கொண்டிருக்கக் கூடாது" என்று கூறுகிறார்கள். நான் அதனோடு வித்தியாசப்படுகிறேன். இல்லை, ஐயா, அவர்கள் தேவனுடைய காரியஸ்தர்களாக (agents) இருக்கிறார்கள். உங்கள் மோட்டார் வாகனம் உங்களுக்கு தேவையாக இருப்பது போன்று, அது ஒரு விஞ்ஞான கண்டு பிடிப்பாக இருக்கிறது. அது சரியே. நீங்கள் உங்கள் மருத்துவரோடு அன்பு கொண்டவர்களாக இருந்து அவரை நேசிப்பது தான் மிகவும் நல்லது, ஆனால் அந்த மருத்துவர் உங்களுடைய சுகமளிப்பவர் அல்ல. தேவன் தான் உங்கள் சுகமளிப்பவராக இருக்கிறார். அது சரியே. உங்கள் மருத்துவர் தேவனுக்கு உதவியாளராக மட்டுமே இருக்கிறார். அது சரியே. ஆனால் மருத்துவர் தம்மால் போக முடியும் தூரம் வரையில் அவர் போகும் போது, அது தான் அவருடைய எல்லை வரம்பாக இருக்கிறது. அவரால் என்ன காண முடிகிறதோ, அவரால் என்ன உணர முடிகிறதோ அதன் பேரில் மாத்திரமே அவரால் கிரியை செய்ய முடியும். அதைக் குறித்து அவருக்குத் தெரிந்தது எல்லாம் அவ்வளவு தான். ஆனால் தேவன் மீதியானவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். 10. எப்படியும் மருத்துவர் சுகப்படுத்துவதில்லை. அவரால் உங்கள் கையைப் பொருத்த முடியும், ஆனால் அவர் வீட்டை விட்டுப் போகும் போது, உங்கள் கை சுகமடைந்திருக்காது. அவர் வெறுமனே உங்கள் கையை பொருத்தி விட்டு, தேவனே அதைச் சுகப்படுத்தும்படி விடுகிறார். பாருங்கள்-? உங்களுக்கு குடல்வால் அழற்சி (appendicitis) இருந்து, அவர் அந்த குடல்வாலை வெளியே எடுக்கும் போது, தேவனே அதைச் சுகப்படுத்தும்படிக்கு அவர் அதை அங்கேயே விட்டு விடுகிறார், அவ்வளவு தான். ஒரு பல்லை பிடுங்கி எடுத்து விட்டு, தேவன் அதைச் சுகப்படுத்தும் படியாக அவர் அதை அங்கேயே விட்டு விடுகிறார். ஏனென்றால் மருந்தானது ஒரு திசுவை படிப்படியாக உருவாக்குவதில்லை, அது செய்வதில்லை - அது அதைச் செய்வதில்லை, அது.... உண்டாக்குவதில்லை. ஜீவன் மாத்திரமே திசுவை உருவாக்குகிறது, தேவனே ஜீவனாக இருக்கிறார். எனவே அவர்களால் சுகப்படுத்த முடியாது, ஒரு காரியமும் கிடையாது. அவர்கள் அவ்வாறு உரிமை கோருவதில்லை. தேவன் சுகப்படுத்துதலைச் செய்கையில், அவர்கள் வெறுமனே எலும்பைப் பொருத்தி, அறுவை சிகிச்சை செய்து, அதை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், மற்றவைகளுக்காகவும் மருந்தைக் கொடுக்கிறார்கள். அது எளிமையாக இருக்கிறது. இந்நிலையில், உங்கள் மருத்துவரை புறக்கணிக்கவும் செய்துவிட வேண்டாம். அவர் ஒரு நல்ல மருத்துவராக, ஒரு கிறிஸ்தவ மருத்துவராக இருப்பாரானால்... என்னுடைய பிரயாணங்கள் எப்படியிருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா-? ஒட்டுமொத்த காட்சியும் எனக்கு உள்ளது, மருத்துவமனைகளிலும், என்னிடம் பேட்டி கண்ட எல்லாவிடங்களிலும் பேசின போது, ஊழியக்காரர்கள் தெய்வீக சுகமளித்தலை விசுவாசிப்பதைக் காட்டிலும் இன்னும் அதிகமாக தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்கிற மருத்துவர்களை நான் கண்டிருக்கிறேன். அது உண்மையாக இருக்கிறது. போலி மருத்துவராக இருக்கிற ஒரு மருத்துவரிடம் நான் எப்பொழுதாவது வருவது மிகவும் அரிது தான். அது -அது சரியே. அவர்களில் பெரும்பாலானோர், "நல்லது, நிச்சயமாக, சங்கை பிரன்ஹாமே, நாங்கள் சுகமளிப்பவர்கள் என்று உரிமை கோருவதில்லை. ஏன், என்னே-? போய் விட்டார்கள் என்று நான் அறிந்திருந்தும், ஜெபமானது ஜனங்களைச் சரியாக மறுபடியும் திரும்பக் கொண்டு வருவதை நான் கண்டிருக்கிறேன். நல்லது, நிச்சயமாக, அது அவ்வண்ணம் இருந்தாக வேண்டும்” என்று கூறினார். பாருங்கள், அவர்கள் சுகமளிப்பவர்கள் என்று உரிமை கோருவதில்லை. இப்பொழுது, குறுகிய மனப்பான்மையும், சுயநலத்தையும் உடைய சிலரை நான் கொண்டு இருந்திருக்கிறேன், அவர்கள் தாங்கள் தான் அதைச் செய்வதாக எண்ணிக் கொள்கிறார்கள், எனவே எப்படியும் அவன் ஒருக்காலும் எங்கேயும் போவதில்லை. அவனை சற்றே கவனித்துப் பாருங்கள், அவன் மிக சீக்கிரத்திலேயே காட்சியை மங்கிப் போக செய்து விடுவான். ஒரு தேவன் - தேவனை நம்புகிற ஒரு மனிதன்.... 11. என்னுடைய ஒரு சிறு நண்பர் ஓர் அற்புதமான சிறு மருத்துவராக இருந்து வருகிறார். அவர் தேவனிடத்தில் விசுவாசம் வைத்திருந்தாலும், அவர் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த வாரத்தில், சென்ற வாரத்துக்கு முந்தின வாரத்தில், அவர் இயேசு கிறிஸ்துவிடம் வழிநடத்தப் பட்டார். அவருடைய உத்தியோகமும் மற்றும் எல்லாமும் ஏற்கனவே அபிவிருத்தி ஆகிவிட்டதாகக் கூறினார்; அவர் அதைக் குறித்து எதையும் கூறவில்லை . நான், "கவலைப்படாதீர், அது சரியாக முன்னேற்றம் அடைந்து விடும்” என்றேன். நீங்கள் அப்படியே தேவனை நம்பி, அங்கே வெளியிலுள்ள மருத்துவமனையில் உள்ள உங்கள் நோயாளிகளோடும் மற்றும் காரியங்களோடும் நீங்கள் எவ்வளவு அதிகம் வெற்றிகரமாக இருக்கிறீர்கள் என்று கவனியுங்கள். தேவனை முதலாவது வையுங்கள். பணியகத்திற்கும் (home), மற்ற இடங்களுக்கும் போவதற்கு முன்பாக ஜெபம் பண்ணி, அதைக் கண்டுகொள்ளுங்கள். கர்த்தருக்குச் சித்தமானால், ஒருக்கால் நாளை இரவில், நான் அமெரிக்க மருத்துவ சங்கத்தின் பத்திரிகையிலிருந்து அந்தக் கட்டுரையை வாசித்துக் காட்டுவேன், அவர்கள் தெய்வீக சுகமளித்தலைக் குறித்து என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை உங்களுக்கு வாசித்துக் காண்பிப்பேன். 12. இப்பொழுது, தாவீது, அல்லது சரியாகச் சொன்னால் சவுல், அவன் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, ஒரு மகத்தான மனிதனாகவும், அருமையான தோற்றம் கொண்டவனாவும், உயரமும் கட்டுறுதி வாய்ந்தவனாகவும், நேரான தோள்களை உடையவனாகவும், ஓ, அவன் பெரியவனாகவும், தன்னுடைய முழு இராணுவத்திற்கும் மேலாக தலையையும் புயங்களையும் உடையவனாகவும் இருந்தான்... அவர்கள், அது நம்முடைய இராஜா" என்றார்கள். அது அவர்களை எதனிடமாக வழி நடத்தினது-? இறுதியாக, ஒரு பின்வாங்கிப் போன ஒரு நிலைக்குத் தான். அவர்களுடைய இராஜா பின்வாங்கிப் போனான். மேலும் இப்பொழுது, அவர்களுடைய தெரிந்தெடுத்தலானது நன்றாக இல்லை என்பதை தேவன் கண்டபோது, தேவன் தமக்கு ஒரு இராஜாவை தெரிந்து கொள்ளும்படிக்குப் போனார். எனவே அவர் சாமுவேலிடம், "கொம்பில் எண்ணெயை நிரப்பி, ஈசாவிடத்திற்குப் போ, நான்.... அவனுடைய குமாரர்களை அழைப்பி, நான் யாரை தெர்ந்தெடுத்திருக்கிறேன் என்று நான் அங்கு போகும் போது, உனக்குச் சொல்லுவேன், இராஜாவாக இருக்கும்படி நான் யாரை தெரிந்து எடுத்திருக்கிறேன் என்பதை உனக்குச் சொல்லுவேன்” என்றார். எனவே அவன் அங்கு சென்றான். இந்நிலையில், ஈசாவும் கூட, அல்லது சரியாகச் சொன்னால் சாமுவேலும் கூட, இந்த மகத்தான பெரிய அருமையான வாலிபன்... சவுலைப் போன்று இருப்பான் என்று நினைத்தான். அவர்கள் எல்லாரிலும் மூத்தவன் ஒரு பெரிய உயரமாக கட்டுறுதி வாய்ந்தவனாக தோற்றமளித்த மனிதனாக வெளியே வந்திருப்பான், அவன், இராஜாவாக இருப்பவன் இவன் தான்” என்றான். இவ்வண்ணமாக அவன் தன்னுடைய தலையை உயர்த்தினபடி அங்கே வெளியில் வந்தான், உங்களுக்குத் தெரியும். எங்காகிலும் இருக்கும் ஜனங்களைப் போல, அவர்கள் அப்படியே.. அது ஜனங்களின் மேலுள்ள மனநிலை மனப்போக்காக உள்ளது. 13. இப்பொழுது, இங்கே இந்தப் பட்டணத்திலுள்ள மனிதர்கள் பக்தியாக ஆகும்படிக்கு விரும்புகிறார்கள். அவன் தேடுகிற முதலாவது காரியம் என்னவென்றால், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் உருவம் சுற்றிலும் எல்லாவிடங்களிலும் தொங்கிக் கொண்டிருக்க, மகத்தான பகட்டுத் தோற்றம் உடைய ஜன்னல்களும், பட்டு, பருத்தி கம்பளத்தால் ஆன மெத்தென்ற துணியாலான இருக்கைகளை உடையதும் மற்றும் எல்லாவற்றையும் உடையதுமான, பட்டணத்தில் அவனால் கண்டு பிடிக்க முடிந்த மிகப்பெரிய சபைகளில் ஒன்று தான்; அங்கு தான் அவன் தேவனைக் காண்பதாக எண்ணிக்கொள்கிறான், ஏனென்றால் அது பெரியதாக உள்ளது. ஒருக்கால் அவன் ஆலயத்தில் உயர் பதவியிலிருப்பவனாக இருக்கலாம், ஒருக்கால் கீர்த்தி வாய்ந்தவராக அங்கு போகலாம், ஆனால் தேவன் அங்கே இருக்கிறார் என்பதாக அது அர்த்தப்படுத்துவதில்லை. வழக்கமாக தேவனுடைய தெரிந்தெடுத்தலானது இங்கே மூலையில் ஏதோவொரு இடத்தில் உள்ள ஒரு சிறிய பழைய மிஷன் ஊழியமாகத் தான் இருக்கிறது, அவர்கள் அங்கே தம்புருவை அடித்துக் கொண்டும், தங்கள் கரங்களைத் தட்டிக் கொண்டும் இருப்பார்கள். சில நேரங்களில் அங்கே தான் தேவன் இருக்கிறார். அது சரியே. பாருங்கள், ஆனால் மனிதனுடைய பாகமானது, மனுஷீக ஆவியானது, அவர்கள் அந்தப் பெரிய பிரகாசமான, பளபளக்கும் ஏதோவொன்றைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், பளபளக்கிறதாக அவர்கள் காணும் எல்லாவற்றிலும் அவர்கள் குதித்து விடுகிறார்கள். ஆனால் பளபளப்பாக மின்னுவது எல்லாம் பொன்னாகாது. நீங்கள் அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளலாம் மேலும் பிறகு.... 14. அவர்கள்..... இன்று அது தான் உலகத்திற்கு சம்பவித்திருக்கிறது; அவர்கள் இயேசு கிறிஸ்துவின் மிகவும் எளிய சுவிசேஷத்தை புறக்கணித்து விட்டு, மனோ சாஸ்திரத்தைப் படித்து, இளங்கலைப் பட்டத்தையும், மற்ற எல்லா காரியங்களையும் பெற்ற பெரிய கல்விகற்ற அறிவாளி போன்றதும், படித்தவர்களும், புத்திசாலிகளும், சூட்சும புத்தியுடையவர்களுமான ஏதோவொன்றிற்காக வெளியே போய் விட்டார்கள், உங்களுக்குத் தெரியும். சபைகளில், மகத்தான, அருமையான இலட்சக்கணக்கான டாலர்கள்.... நான் உங்களிடம் ஒரு காரியத்தைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் ஏன் இலட்சக்கணக்காக டாலர்கள் கொண்ட சபைகளைக் கட்டி, இயேசு கிறிஸ்து சீக்கிரமாக வருகிறார் என்று பிரசங்கம் பண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள்-? எனக்கு அது புரியவில்லை, உங்களுக்கும் தானே-? என்னால் அதைக் காண முடியவில்லை . இயேசு சீக்கிரம் வருவாரானால், நாம் இதைக் குறித்து ஏன் கவலைப்படுகிறோம்-? நாம் -நாம் போய் ஜனங்களை இரட்சிப்புக்குள் கொண்டு வருவோம்; அது தான் பிரதான காரியம் ஆகும். இயேசு ஒருபோதும், "பெரிய சபைகளைக் கட்டுங்கள்" என்று சொல்லவில்லை. இல்லை, அவர் அவ்வாறு சொல்லவே இல்லை. வேதாகமக் கல்லூரிகளைக் கொண்டிருங்கள் என்று அவர் ஒரு போதும் சொல்லவில்லை. சபைகளுக்கு விரோதமாக எனக்கு எதுவும் கிடையாது, பெரிய சபைகள்; அவைகள் எல்லாம் சரி தான். வேதாகமக் கல்லூரிகளுக்கு எதிராக எனக்கு எதுவும் கிடையாது; அவைகள் எல்லாம் சரி தான். ஆனால் அதைச் செய்யும்படியாக இயேசு ஒரு போதும் நமக்குக் கட்டளையிடவில்லை. பெரிய சபைகளைக் கட்டுவதற்கோ அல்லது வேதாகமக் கல்லூரிகளைக் கொண்டிருக்கும்படிக்கோ அவர் ஒருக்காலும் சொல்லவில்லை. மருத்துவமனைளைக் கட்டுவதற்கோ, பள்ளிகளைக் கட்டுவதற்கோ அவர் ஒரு போதும் சொல்லவில்லை; ஆனால் அவைகள் எல்லாம் சரியாகத் தான் இருக்கின்றன. அவைகளுக்கு விரோதமாக எனக்கு எதுவும் கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 15. ஆனால் நாம் செய்யும்படி அவர் நமக்குச் சொன்ன உண்மையான நியமத்தை நாம் புறக்கணித்து விட்டு, இரண்டாம் தரமானதை நாம் எடுத்துக் கொண்டோம். நாம் மகத்தான மருத்துவமனைகளையும் பள்ளிகளையும், மகத்தான இடங்களையும், வேதாகமக் கல்லூரிகளையும் கட்டி, நம்முடைய பிரசங்கிமார்களை உருவாக்கும்படியாக நாம் அவர்களுக்கு கல்வி புகட்டினோம், எனவே அவர்களால் மிக அருமையான எழுச்சியான வார்த்தைகளைக் கொண்டு பேசவும், மனோசாஸ்திரத்தை உபயோகிக்கவும், விறைப்பாக நின்றுகொண்டு, எவ்வளவு நாகரீகமாக இருக்க முடியுமோ அவ்வளவு நாகரீகமாக ஆமென்” என்று கூறவும், மற்றும் அதைக் குறித்த எல்லாவற்றையும் செய்யவும் முடிகிறது. அது நமக்கு என்ன தந்திருக்கிறது-? ஒரு பெருங்கூட்டம் பின்வாங்கிப்போக ஜனங்களைத் தான் தந்திருக்கிறது (அது சரியே. அது சரியே) குளிர்ந்து போனதும், சடங்காசாரமானதும், அலட்சியப் போக்குடைய ஒரு கூட்டம் சபைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை, ஆவிக்குரிய விதமாகப் பேசினால், சீதோஷ்ண நிலையில், பூஜ்ஜியத்தைப் போன்று அவ்வளவு குளிர்ந்து போன சபைகளாக அவை இருக்கின்றன. நான் அதை நகைச்சுவைக்காகச் சொல்லவில்லை, ஏனென்றால் இது நகைச்சுவைப் பேசும் இடமல்ல. ஆனால் நான் அதை உண்மைக்காகவே கூறுகிறேன். அது உண்மையாக இருக்கிறது. அது எப்படியாக நம்மை அந்த நிலைக்குள் கொண்டு போய் விட்டது. ஆயினும் நாம் எப்படியாக அந்தப் பெரிய காரியங்களை விரும்புகிறோம். என்னே, ஆமாம், நாம் -நாம் ஒரு.... விரும்புகிறோம். ஏதோவொரு மனிதன் ஒரு வியாபாரத்தைப் பெற்றிருந்து, அந்த வியாபாரிகளோடு பெற்றுக் கொள்ள விரும்புகிறான். அவன் அங்கே பட்டணத்தில் இருக்கும் மிகப் பெரிய சபைக்கு போய், அங்கே பின்னால் தன்னுடைய இருக்கையை எடுத்து, தன்னுடைய பெயரை புத்தகத்தில் பதிவு செய்கிறான், அது அநேக நேரங்களில், மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக தலையும் புயங்களும் கொண்ட சவுலை (பாருங்கள்-?) அவர்கள் தேர்ந்தெடுத்த போது, இஸ்ரவேலர் செய்தது போன்றே அது சரியாக இருக்கிறது, உங்களுக்குத் தெரியும். அந்த வழியில் நீங்கள் தொல்லையில் சிக்கிக் கொள்கிறீர்கள். 16. ஆனால் தேவன் சாமுவேலிடம், ஒரு கலசம் எண்ணெயை எடுத்துக் கொண்டு, அங்கு போ, யாரை அபிஷேகம் பண்ண வேண்டுமென்று நான் உனக்குச் சொல்லுவேன்” என்றார். நல்லது, ஈசா அங்கே வெளியில் வந்து, தன்னுடைய மூத்த மகனை வெளியே கொண்டு வந்தான், அவன் ஒரு மகத்தான பெரிய ஆறு அடி அல்லது அதற்கும் அதிக உயரம் உடையவனாக இருந்ததால், "இராஜாவாக இருக்க வேண்டியவன் இவன் தான்" என்றான். அவன் கடந்து சென்றான். சாமுவேல் எண்ணெய் கலசத்தை எடுத்து, "நிச்சயமாக, அது இவன் தான்" என்றான். அவன் கடந்து சென்ற போது, தேவனோ, "அது இவனல்ல; நான் இவனைப் புறக்கணித்து விட்டேன்” என்றார். என்னே, அவன், "நல்லது, இந்த வாலிபன் கிட்டத்தட்ட அவனுடைய அளவில் தான் இருக்கிறான், நாம் இவனை வெளியே கொண்டு வருவோம். இவன் ஒரு பெரிய அழகான தோற்றம் உடையவனாக இருக்கிறான். இவனுடைய தலையின் பக்கவாட்டில் அந்தக் கிரீடம் இருக்க, இவனுடைய புது சூட்டை அணிந்திருக்கும் போது, இவன் நன்றாகக் காணப்படுவான்” என்றான். ஜனங்களுக்கு முன்பாக நிற்கும் போது, அவர் எவ்வாறு தோற்றமளிப்பார் என்ற விதமாகத்தான் ஜனங்கள் தங்கள் மேய்ப்பரை இன்று மதிப்பிடுகிறார்கள். என்னவொரு அவமானம். சரி. அவ்வண்ணமாக, அவன் கடந்து போகையில், சாமுவேல் தன்னுடைய எண்ணெய் கலசத்தை எடுத்து, அவன் மேல் அதை ஊற்ற ஓடினான். அவரோ, "அவனை ஏற்றுக்கொள்ள மாட்டேன்; நான் அவனைப் புறக்கணித்தேன்” என்றார். அவன் ஏழாவது மகனிடம் வருவது மட்டுமாக, அவன் தொடர்ச்சியாக அவர்களை வெளியே கொண்டு வந்து கொண்டேயிருந்தான். அது தான் முடிவாக இருந்தது. சாமுவேல், நல்லது, உனக்கு இவ்வளவு குமாரர்கள் தானா-?" என்று கேட்டான். அதற்கு அவன், “இவ்வளவு குமாரர்கள் தான் எனக்கு இருக்கிறார்கள்” என்றான். தொடர்ந்து அவன், "ஆமாம். ஓ, யோக்கியதை இல்லாத ஒரு சிறுவன் அங்கே வெளியில் பின்புறத்தில் எனக்கு இருக்கிறான், அவன் எங்கேயோ ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்” என்றான். "நல்லது, போய் அவனை அழைத்துக் கொண்டு வா. நாம் போய் அவனை அழைத்துக் கொண்டு வரும் மட்டுமாக, நாம் உட்காரப் போவதில்லை” என்றான். எனவே அவர்கள் அங்கே பின்புறத்திற்குப் போனார்கள். அவர்களை என்னால் காண முடிகிறது, மனந்தளர்ந்து போனவர்களாக, தங்கள் முகம் காணப்பட்டதாக இருக்கும் அவர்களில் சிலர், "நல்லது, நிச்சயமாக, அது இராஜாவாக இருக்காது" என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். எனவே அவர்கள்.... ஜனங்கள் இன்றைக்கு அந்தவிதமாகத்தான் நினைக்கிறார்கள், "தெய்வீக சுகமளித்தலைப் போன்று அப்படிப்பட்ட ஏதாவது காரியம் அங்கே இருக்குமானால், அது இதைப் போன்ற ஒரு கூட்டம் ஜனங்களிடத்தில் இருந்திருக்காது. தேவனுடைய வல்லமை போன்ற ஏதாகிலும் இருக்குமானால், அது.... இருந்திருக்காது" என்று நினைக்கிறார்கள். 17. ஒரு நாள், ஓரிகானில் என்னிடம் பேசிய ஒரு பெண்மணியை, ஒரு - ஒரு செய்தி நிருபரைக் கொண்டு இருந்தேன், அவள், "நல்லது, அங்கே அதற்கு ஏதாகிலும் இருக்குமானால், அது நீர் போதிக்கிறவர்களைப் போன்ற ஒரு கூட்ட படிப்பறிவில்லாத காரியங்கள் மத்தியில் இருந்து இருக்காது” என்றாள். நான், "நீ அவ்வாறு நினைக்கவில்லையா-? நீ உன்னுடைய பெரிய சபைக்குச் சென்று, பிறகு மரித்துப் போகலாம். நீ சுகத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பினால், அங்கு வா என்றேன். அவள், "நான் அங்கு போவதற்கு முன்பு, மற்றவர்கள்... அழுவது போன்று, கதறி அழுவது. அவர்கள் அவ்வாறு அழுவதை நான் கேட்கும் போது, அது என்னுடைய முதுகின் மேல் நடுக்கமாக ஓடும்படி செய்கிறது” என்றாள். அதற்கு நான், "நீ எப்பொழுதாவது பரலோகத்திற்குப் போவாயானால், நீ உறைந்து விடுவாய், ஏனென்றால் அங்கு மேலே நீ அதில் நிறைய கேட்கப் போகிறாய்” என்றேன். அது-அது சரியே. நான், "நான் ஒரு காரியத்தை உன்னிடம் கூறுகிறேன். உன்னால் முடியாமல் போனால்...” என்றேன். நாகமானைப் போன்று, அவன், "யோர்தானின் அந்தப் பழைய சேற்றுத் தண்ணீரைக் காட்டிலும் இங்கே என்னுடைய தேசத்திலுள்ள தண்ணீர்கள் சிறந்தது அல்லவா” என்றான். அவன் திரும்பி, முழுவதும் பொங்கினவனாக, திரும்பிப் போக ஆரம்பித்தான். அவன் தன்னைத் தான் தாழ்த்த விருப்பம் கொள்ளவில்லை. அவன், "சரி, நீ உன்னுடைய குஷ்டரோகத்தோடு திரும்பிப் போக விரும்பினால், போகலாம்” என்றான். இந்நிலையில் அவன் தன்னுடைய உயரமான குதிரையிலிருந்து இறங்கி, அங்கு கீழே சென்று, தன்னைத் தானே தாழ்த்தி, முங்கி எழும்படியாக தேவன் அவனிடம் கூறின இடத்தில் அந்த சேற்றுத் தண்ணீரில் முங்கி எழுந்தான், அப்போது அவனுடைய குஷ்டரோகத்திலிருந்து விடுதலையானான். அது சரியே. நீங்கள் தேவனுடைய வழியில் வந்தாக வேண்டும், உங்களுடைய வழியில் அல்ல-? அவருடைய வழியில். 18. மேலும் கவனியுங்கள். அப்போது எப்படியாக என்னால் தாவீதைக் காண முடிகிறது; இதோ அவன் மேய்ப்பர்களுக்கான ஒரு மேல் அங்கியை அணிந்தவனாக, உள்ளே ஓடி வருகிறான், அநேகமாக, அந்த மேல் அங்கியானது செம்மறி ஆட்டுத் தோலால் செய்யப்பட்டிருக்கும், அவன் உள்ளே ஓடி வருகிறான், ஒரு சிறு வயதுள்ள பெண் தன்மை கொண்ட சிறுவனாகத் தோற்றமளித்த பையனாக அவன் இருந்தான். அவன் சிவந்த மேனியுடையவனாக இருந்தான் என்று வேதாகமம் கூறுகிறது, அவன் ஒரு சிறு வயதுள்ள ஒல்லியான பையனாக இருந்தானே அன்றி வேறெதுவுமாக இருக்கவில்லை, அவன் ஒருவித பெண் தன்மை கொண்ட சிறுவனாக, அழகான ரூபமாய் தான் இருந்தான், சின்னஞ்சிறிய பையன் அதோ உள்ளே ஓடி வருகிறான். அப்போது பரிசுத்த ஆவியானவர் தீர்க்கதரிசியின் மேல் வந்து, "இவனுடைய தலையின் மேல் எண்ணெயை ஊற்று; நான் இவனைத் தான் தெரிந்தெடுத்துள்ளேன்'' என்றார். இந்த பெரிய மனிதர்களும், பெரிய அழகாயிருப்பவர்களும், கட்டுறுதியாக தோற்றம் கொண்ட மனிதர்களும் தான் இராஜாவாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டு அங்கே நின்று கொண்டிருந்த அந்த ஜனங்கள் எல்லாருக்கும் அது என்னவொரு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் சிறுவனாகிய தாவீதின் தலையின் மேல் தான் அவன் எண்ணெயை ஊற்றினான். அந்த நாள் முதற் கொண்டு, பரிசுத்த ஆவியானவர் தாவீதோடு கூட இருந்தார். தேவன் அவனோடு கூட இருந்தார். அவன் சந்தோஷத்தோடே வெளியே வனாந்தரத்திற்குள் திரும்பிப் போய் விட்டான். அவர்கள் திரும்பிப் போய்விட்டார்கள், ஆவியானவர் சவுலை விட்டு விலகிச்சென்று விட்டார். ஆவியானவர் அவனை விட்டு போய், ஒரு அசுத்த ஆவி அவருடைய இடத்தை எடுத்துக்கொண்டு, சவுலின் மேல் வரும் அளவுக்கு, அவன் பின்வாங்கி, தேவனை விட்டு மிகவும் தூரமாகப் போய் விட்டிருந்தான். சவுல் முற்றிலுமாக அடிக்கடி மனநிலை மாறிக் கொண்டேயிருக்கிறவனாகவும் (moody), முன்கோபம் உள்ளவனாகவும் எரிச்சல் படுகிறவனாகவும், பொருட்களை சுற்றிலும் போட்டு உதைக்கிறவனாகவும், சில ஜனங்கள் திங்கட்கிழமை காலையில் செய்யத் தொடங்குவது போன்று முழுவதுமாக சிடுசிடுப்புள்ளவனாகவும் கோபமுள்ளவனாகவும் இருந்தான். எனவே அவர்கள் - அவன் எல்லா நேரமும் எளிதில் கோபம் கொள்கிறவனாக வெடுவெடுப்பாக இருந்தான். அது ஒரு அசுத்த ஆவி என்று உங்களுக்குத் தெரியுமா-? அது சரியே. எனவே அவர்கள்... மருத்துவர்களால் நலமான எதையும் அவனுக்குச் செய்ய முடியாதிருந்தது. அங்கே சுற்றிலும் அவர்களுக்கு நிறைய மருத்துவர்கள் இருக்கத்தான் செய்தார்கள், ஆனால் அவர்களால் அதற்கு உதவி செய்ய முடியாதிருந்தது, ஏனென்றால் அது ஒரு ஆவிக்குரிய நிலைமையாக இருந்தது. எனவே அந்த மனிதர்களில் ஒருவன் சுற்றிலும் கடந்து சென்று, ஒரு சில இடங்களைப் பார்த்த போது, அவர்கள், "நல்லது, ஒரு தெய்வீக சுகமளிப்பவர் எங்கே இருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியும்” என்றார்கள். “ஏன், அது யார்-?” "அங்கே வெளியே பின்புறத்திலே ஈசாய்க்கு ஒரு குமாரன் இருக்கிறான், அவன்...” என்றார்கள். ஆமாம், அவன் ஒரு தெய்வீக சுகமளிப்பவனாக இருந்தான். நிச்சயமாக அவன் அவ்வாறு இருந்தான். அவன் இசையின் மூலமாக சுகமளித்தான். ஆமென். அதைத்தான் அவன் செய்தான். அசுத்த ஆவிகளைத் துரத்தும்படியான ஒரு வரம் அவனுக்கு இருந்தது. பரிசுத்த ஆவியானவர் அந்நாட்களில் வந்திருக்கவில்லை, எனவே அவன் அவைகளை இசையின் மூலமாக, கர்த்தரைக் குறித்துள்ள வசனங்களை வாசிப்பதின் மூலமாக துரத்தினான். "கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்." அந்த அசுத்த ஆவிகள் சவுலை விட்டுப் போகும்படியாக அது அவைகளுக்கு தொந்தரவாக (disturbed) இருந்தது. 20. நரம்பிசைக் கருவிகளைக் கொண்டு மீட்டப்படும் இசையில் (string music) நம்பிக்கை இல்லாத ஜனங்களாகிய உங்களுக்கு அவமானம். அசுத்த ஆவிகளுக்கு அது பிடிக்கவே பிடிக்காமல் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. அவைகள் புறப்பட்டு போக வேண்டி இருக்கிறது. தாவீது தன்னுடைய நரம்பிசை கருவியை இசைப்பதன் மூலமாக பிசாசுகளைத் துரத்தினான். அவ்வாறு தான் வேதவாக்கியம் கூறுகிறது. அது சரியே. தாவீது அதை இசைக்கத் தொடங்கின போது, அந்த அசுத்த ஆவி சவுலைவிட்டு வெளியேறினது. அது சரி தானா-? இவ்வாறாக இந்தச் சிறு பையன் ஒரு நோக்கத்திற்காகவே உலகத்தில் பிறந்திருந்தான். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? தேவன் அவனோடு கூட இருந்தார் என்பதை அவன் அறிந்திருந்தான். நிச்சயமாகவே அவன் அறிந்திருந்தான். ஏனென்றால் அவனால்.... (செய்ய முடிந்தது. அவன் துப்பாக்கியால் சுடுவதில் கைதேர்ந்தவனாக இருந்தான் (crack shot); அவன் காடுகளில் வசிக்கும் ஒருவனாயிருந்தான். அவனுக்கு அங்கு வெளியில் ஒரு சிறிய கவண்வில் இருந்தது. ஒரு வயதான சிங்கமானது ஒரு.... ஐப் பிடித்தது. ஒரு நாள் கரடியானது உள்ளே ஓடி வந்து, ஒரு சிறு செம்மறியாட்டைப் பிடித்து, அதனோடு வெளியே போகத் துவங்க, தாவீது தன்னுடைய கவணை எடுத்து, அந்த சிங்கத்தை வீழ்த்தி, அந்த ஆட்டை அதனுடைய வாயிலிருந்து எடுத்துக் கொண்டான். அந்தச் சிங்கம் எழுந்து, தன்னிலை அடைந்து எழும்பின போது, தாவீது அதனுடைய தாடியைப் பிடித்து, தன்னுடைய வேட்டை கத்தியை அந்தச் சிங்கத்தில் செருக, அது அதை தீர்த்துக் கட்டினது. எனவே தேவன் தன்னோடு இருக்கிறதை அவன் அறிந்திருந்தான். அவன் அந்தக் கரடியையும் கூட கொன்று போட்டான். தேவன் தன்னோடு இருப்பதை அவன் அறிந்திருந்தான். இப்பொழுது, அவன் செய்த அடுத்த காரியம் என்னவென்றால், இசையை மீட்டி, பிசாசுகளைத் துரத்தினது தான். அது ஆவியால் நிறைந்த ஒரு மனிதனாக இல்லாமல் இருந்தால், அப்படிப்பட்ட ஒருவனை நான் ஒருக்காலும் கண்டதில்லை. அவன் சிறுவனாகவும் சிவந்த மேனியை உடையவனாகவும் இருந்தான், ஆனால் அவன் ஆவியால் நிறைந்த ஒரு மனிதனாக இருந்தான். தேவன் அவனோடு கூட இருந்தார். 21. அதன்பிறகு முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அங்கே ஒரு யுத்தம் வெடித்தது, பெலிஸ்தியர்கள் வந்து, "நல்லது, நாம் இஸ்ரவேலரோடு யுத்தம் செய்யப் போகிறோம்” என்றார்கள். சவுல் தன்னுடைய ஜனங்கள் எல்லாரையும் வைத்திருந்தான். அப்போது சிவந்த மேனியுடைய அந்தச் சிறுவனின் தகப்பனுடைய ஆடுகளைக் கவனிக்கும்படியாக அவனை அங்கே பின்னால் அந்த மலைபுறத்திற்குத் அனுப்பியிருந்தான் அவன். இந்நிலையில், அந்நேரத்தில் யுத்தம் செய்யும்படியாக அவன் அந்தப் பெரிய யுத்த வீரர்களை அனுப்பி வைத்து, அந்தச் சிறுவனால் யுத்தம் செய்ய முடியாது. எனவே நாம் அவனை அங்கே வெளியில் பின் பாகத்திலுள்ள ஆடுகளோடு திரும்ப இருக்கும்படி செய்து விடுவோம். எனவே நாம் அந்த வேலையைச் செய்யும்படியாக இந்த மகத்தான பெரிய மனுஷர்களை அங்கே வெளியில் அனுப்பி வைப்போம்” என்றான். இவ்வாறாக அவன் தன்னுடைய குமாரர்கள் எல்லாரையும் அனுப்பி, பட்டயத்தையும் மற்றவைகளையும் அவர்களுடைய ஈட்டிகளையும் அவர்களுக்கு கொடுத்தான். அவர்கள் பயிற்சி பெற்ற யுத்த வீரர்களாக இருந்தார்கள். அவர்கள் அங்கே வெளியே யுத்தம் செய்யும்படியாக, தங்கள் பி.எச்.டி பட்டங்களோடும் எல்லாவற்றோடும் போனார்கள். சத்துருவோ அவர்களுக்கு சவால் விடும்படியாக எப்போதுமே அங்கே இருந்தான். 22. இந்நிலையில், அதோ 9 அடி, மூன்று அங்குலங்கள் உயரமுடைய ஒரு பெரிய மனிதனாகிய கோலியாத் வெளியே வருகிறான், அவன் மகத்தான பெரிய மனிதனாக இருந்தான். அவன் வெளியே நடந்துவந்து, "நான் உங்களிடம் ஒரு பிரேரணையைச் (முன்மொழிவுச் செய்தி) செய்கிறேன். ஏன் இந்த மனுஷர்கள் எல்லாரும் சாக வேண்டும்-? இங்கே என்கிட்ட ஒரு மனிதனை அனுப்புங்கள், நான் அவனோடு சண்டையிடட்டும். அவன் என்னைக் கொன்று போட்டால், நாங்கள் உங்களுடைய வேலைக்காரர்களாக இருப்போம். நான் அவனைக் கொன்று போட்டால், ஏன், நீங்கள் எங்களுடைய வேலைக்காரர்களாக இருப்பீர்கள்” என்றான். நிச்சயமாக, சத்துரு, அவனுக்கு உங்கள் மேல் அந்த விளிம்பு கிடைக்கும் போது, அவன் வீம்பாக பெருமையோடு பேசவும், அவ்விதமாக தொடர்ந்து செய்து கொண்டு இருக்கவும் விரும்புகிறான். ஓ, அவன் ஒரு பெரிய வீம்பு பேச்சைப் பேசுகிறான். எனவே அவர்கள் ஒவ்வொருவரும், பெரிய பட்டங்களை உடைய அவர்கள் எல்லாருமே நடுங்கிக் கொண்டு இருந்தார்கள்; அவர்கள் அந்த மனிதனைப் பார்த்து பயந்து போயிருந்தார்கள், ஏனென்றால் அவன் ஒரு -ஒரு பெரிய மனிதனாக இருந்தான். இப்படி அவன் 40 நாட்களாக பெருமையோடு வீம்பு பேச்சு பேசிக் கொண்டிருந்தான். 40 என்பது சோதனையின் எண் என்பதை நீங்கள் எப்பொழுதாவது கவனித்திருக்கிறீர்களா-? நிச்சயமாக, அது சோதனையின் எண் தான். மோசே 40 நாட்களாக மலையில் இருந்து விட்டு, திரும்பி வந்து, சோதிக்கப்பட்டான். இயேசு 40 நாட்கள் வனாந்தரத்திற்குச் சென்று சோதிக்கப்பட்டார். 40 நாட்கள் என்பது சோதனையாக இருக்கிறது. 40 நாட்களாக மழை பெய்தது, மற்றும் அதைப் போன்ற காரியங்கள், 40 என்பது சோதனைக்கான தேவனுடைய எண்ணாக இருக்கிறது. 23. அப்போது அதோடு கூட... ஈசா வெளியே போய், தன்னுடைய சிறு மகனை அழைத்து, "தாவீது, நீ போக வேண்டும், கொஞ்சம் அப்பங்களையும் இலேசாக வறுத்த சோளத்தையும் மற்றவைகளையும் எடுத்துக் கொண்டு, நீ மேலே போய், அந்தப் பையன்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்து...வா. அவர்கள் இன்னுமாக தேவனுக்கு முன்பாக சரியாகத் தான் ஜீவித்துக் கொண்டு இருக்கிறார்களா என்று அவர்களுடைய வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டு, திரும்பி வா” என்றான். எனவே தாவீது தன்னுடைய சிறிய கழுதையை பெற்று, அப்படித் தான் நான் நினைக்கிறேன். அதற்கு சேணம் பூட்டி, இலேசாக வறுத்த சோளத்தையும் அப்பங்களையும் அதன் மேல் போட்டுக் கொண்டு, யுத்தத்தை நோக்கிப் போனான். நல்லது. ஏறக்குறைய அவன் அங்கே யுத்த களத்திற்குள் போன சமயத்தில், ஏன், அந்தக் காலையில் அவர்கள் எல்லாரும் வெளியே நின்று கொண்டிருந்தார்கள், இரண்டு ராணுவ சேனைகளுமே பயந்து கொண்டிருந்தார்கள். நல்லது, இந்தப் பெரிய கோலியாத், தன்னுடைய மகத்தான பெரிய அநேக பவுண்டுகள் எடையுள்ள மார்க்கவசத்தையும், முழங்காலுக்குக் கீழும், கணுக்காலுக்கு மேலும் உள்ள காலின் முன் பகுதிக்கு, மூட்டை மறைத்து பாதுகாப்பாக வைக்கும் (shin guards) தன்னுடைய பெரிய எல்லாவற்றோடும், அந்தக் காலையில் அங்கே வெளியில் நடந்து வருகிறான், அவன் அவ்வாறு வெளியில் நடந்து வந்து, சொன்னான், அவன் அகங்காரமாக வீறாப்பு பேசிக் கொண்டிருந்து, "நான் இஸ்ரவேலின் சேனைகளை போருக்கழைக்கிறேன்” என்றான். சகோதரனே. அந்தக் காலையில், அவனுக்காக அது தவறான காதில் விழும்படி நேரிட்டு விட்டது. தான் எங்கே இருக்கிறான் என்று அறிந்தவனாக அங்கே வெளியே ஒரு சிறுவன் நின்று கொண்டு இருந்தான். ஆமென். 24. இன்றிரவு நமக்கு என்ன தேவையாக இருக்கிறது என்றால், தாங்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிற வேறு யாரோ ஒருவர் தான். இன்றிரவு நமக்கு என்ன அவசியமாய் இருக்கிறது என்றால், இயேசு கிறிஸ்துவுக்குள் தங்களுடைய ஸ்தானத்தை அறிந்து இருக்கிற மனிதர்களும் ஸ்திரீகளும் தான். பிசாசு தன்னுடைய பெரிய வீறாப்பு பேச்சைப் பேசும் போது.... அவன் நிச்சயமாகவே தன்னுடைய வீம்பு பேச்சை பேசத்தான் செய்கிறான். அவன் இன்னும் தன்னுடைய செருக்கான வீம்பு பேச்சைப் பேசுகிறான். நமக்கு இன்னும் கோலியாத்துக்கள் இருக்கிறார்கள். நமக்கு தாவீதுகளும் கூட இருக்கிறார்கள். அதற்காக தேவனுக்கு நன்றி. அவன் தன்னுடைய பெரிய தற்பெருமைப் பேச்சைப் பேசினான், அது தவறான நபரின் காதில் விழுந்து விட்டது, ஒரு சிறு பையன் அங்கே சுற்றிலும் நடந்து கொண்டிருந்தான், அவன் அவ்விதமான ஒரு மனிதனாக இருப்பதைப் பார்க்கும்படி, அவன் மேலே ஏறிட்டுப் பார்க்க வேண்டி இருந்தது. ஆனால் தான், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவன் என்பதை அறிந்து இருந்தான், அவன் தன் மேல் அபிஷேகத்தைக் கொண்டிருந்தான். அவன், தேவனை ஒரு சோதனையில் வைத்து, தேவன் யார் என்பதை அறிந்திருந்தான். அவன், எங்கே நின்று கொண்டு இருந்தான் என்பதை அவன் அறிந்திருந்தான். இப்பொழுது, ஜனங்களாகிய உங்களுக்கு இது எவ்வளவு அழகாயுள்ளது என்பதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். நாம் இப்பொழுது துரிதப்படுவோம், ஏனென்றால், இப்பொழுது நேரத்தையும் தாண்டி எனக்கு சற்றேறக்குறைய மூன்று நிமிடங்கள் தான் உள்ளது. 25. கவனியுங்கள், தாவீது தெரிந்து கொள்ளுதலின் மூலம் அழைக்கப்பட்டிருந்தான். அவன் தெரிந்து கொள்ளப்பட்டு, அழைக்கப்பட்டு, அபிஷேகிக்கப்பட்டு, ஸ்தானத்தில் பொருத்தப்பட்டு இருந்தான் (பாருங்கள்-?); அவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு, இராஜாவாக இருக்கும்படி, ஆடு மேய்ப்பதிலிருந்து அழைக்கப்பட்டு, அபிஷேகிக்கப்பட்டு, ஸ்தானத்தில் பொருத்தப்பட்டு இருந்தான். பாருங்கள், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு; ஆபிரகாம்: தெரிந்து கொள்ளப்படுதல், ஈசாக்கு: நீதிமானாக்கப்படுதல், யாக்கோபு: கிருபை, யோசேப்பு: பரிபூரணம், யோசேப்புக்கு விரோதமாக எதுவுமேயில்லை. சரி, அங்கே தான் காரியம், அழைக்கப்படுதல். நீங்கள் ஒரு தாவீதாக இருக்கிறீர்களா-? தேவனால் முதலில் அழைக்கப்பட்டு, தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறீர்களா-? இங்கே எத்தனை பேர் கிறிஸ்தவர்கள், உங்கள் கரத்தை உயர்த்துங்கள். நீங்கள் உங்கள் வாஞ்சையினால் கிறிஸ்தவனாக இல்லை ;நீங்கள் தேவனுடைய விருப்பத்தினால் தான் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறீர்கள். ஆமென். என் பிதா முதலில் ஒருவனை இழுத்தாலொழிய அவன் என்னிடத்தில் வர முடியாது. நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருக்கும்படி, உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு விட்டீர்கள். அது வேத வாக்கியமாயிருக்கிறது. இயேசு, "என் பிதா ஒருவனை அழைத்தாலன்றி ஒருவனும் வர முடியாது” என்று சொல்லி இருக்கிறார். முதலாவது காரியம் என்னவென்றால், நீங்கள் தெரிந்து கொள்ளப்பட்டு, அழைக்கப்பட்டீர்கள். பிறகு தேவன் உங்களை தெரிந்துகொண்ட போது, அவர் உங்களை அழைத்தும் விட்டார், நீங்கள் அவருடைய அழைப்பிற்கு கவனம் செலுத்தினீர்கள். அதன் பிறகு அவர் உங்கள் மேல் அபிஷேக எண்ணெயை, பரிசுத்த ஆவியை ஊற்றினார். எண்ணெய் உடைய அந்தக் கலசமானது.... வேதாகமத்தில் எண்ணெய் என்பது எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது-? பரிசுத்த ஆவியை. அவன் அவன் மேல் எண்ணெயை ஊற்றின போது, அவன் அடையாள வடிவமாக பரிசுத்த ஆவியைக் கொண்டு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். ஆமென். உங்களுக்கு அது புரிகிறது என்று நம்புகிறேன். அது அப்படியே புதியதாக வருகிறது. அவன் அந்த எண்ணெயை அவன் மேல் ஊற்றினான், அது அவன் மேல் எல்லா இடங்களிலும் சென்றது, ஒரு கொம்பு முழுவதும் இருந்த அது அவன் மேல் முழுவதும் சென்றது, மட்டாக அல்ல. அந்தவிதமாகத்தான் தேவன் ஒரு மனிதன் மேல் பரிசுத்த ஆவியை ஊற்றுகிறார், மிகக்குறைந்த அளவோடு அல்ல, அதற்குள்ளாக அவனை அப்படியே ஞானஸ்நானம் பண்ணுவது, அவனை ஆவியைக் கொண்டு அபிஷேகித்தல். கவனியுங்கள், அவன் அப்போது சரியாக இருந்தான், அந்த அபிஷேகம் அவன்மேல் விழுந்தபோது, அவன் இராஜாவாக ஸ்தானத்தில் பொருத்தப்பட்டான். ஆமென். நீங்கள் இராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஸ்தானத்தில் பொருத்தப்பட்டிருக்கிறீர்கள். அது சரி தானா-? நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும் அந்த கணமே, தேவன் உங்களை சுதந்தரவாளியாக இராஜ்யத்திற்குள் பொருத்தி விடுகிறார். என்னவொரு அழகான காட்சி. அங்கே தான் காரியம். 26. ஆபிரகாம்: தெரிந்து கொள்ளப்படுதல், ஈசாக்கு: நீதிமானாக்கப்படுதல், வருகிறவன் விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுவான். யாக்கோபு: கிருபை, நீங்கள் செய்திருப்பது எதுவுமே இல்லை, ஆனால் தேவனுடைய இருக்கத்தினால் தான். மேலும் யோசேப்பு: பரிபூரணம், அவன் ஸ்தானத்தில் பொருத்தப்பட்டான். ஆமென். தாவீது தெரிந்து கொள்ளப்பட்டு, அழைக்கப்பட்டு, அபிஷேகிக்கப்பட்டு, ஸ்தானத்தில் பொருத்தப்பட்டான்: நீங்கள் தெரிந்து கொள்ளப்பட்டு, அழைக்கப்பட்டு, அபிஷேகிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் சரீரத்தில் பொருத்தப்பட்டீர்கள். ஒரே ஆவியினாலே, நாமெல்லாரும் கிறிஸ்துவின் சரீரத்திற்குள் ஸ்தானத்தில் பொருத்தப் பட்டோம். நீங்கள் இன்னுமாக எப்பொழுதாவது அதை முயற்சித்துக் பார்த்திருக்கிறீர்களா-? உங்கள் ஜீவியம் முழுவதும் உங்கள் மேல் ஏதோவொன்று இருந்து வருகிறதாக அறிந்திருக்கிற கிறிஸ்தவராக இங்கே உள்ளேயிருக்கும் ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயும். நீங்கள் ஒரு பிள்ளையாக இருந்த போது, நீங்கள் தேவனை சேவிக்க வேண்டுமென்று ஏங்கினீர்கள். ஏதோவொன்று உங்கள் இருதயத்தைத் தட்டினது; அது தான் தேவனுடைய தெரிந்து கொள்ளுதல். 27. தாவீது, எப்பொழுதாகிலும் ஏதாவது நடப்பதற்கு முன்பாகவே, ஏதோவொன்றில், அவன் தன் மேல் எப்பொழுதாவது அபிஷேக தைலத்தைக் கொண்டிருப்பதற்கு முன்பே, தேவன் அவனோடு இருந்தார் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் ஒரு கரடியைக் கொன்றான்; அவன் அந்தக் கவண் வில்லைக்கொண்டு ஒரு சிங்கத்தையும் கொன்றான். அதைச் செய்வது என்பது ஒரு சாதாரண மனிதனுக்கு மிகப்பெரிய காரியம் என்பதை அவன் அறிந்திருந்தான். அவனால் அதைச் செய்ய முடிந்தது என்பதை அவன் தெரிந்துகெண்டான். தேவன் தன்னோடு இருப்பதை அவன் அறிந்தான், ஏனென்றால் அவனுடைய முழு இருதயமும் தேவனுக்கு பின்னால் தான் அடித்துக் கொண்டிருந்தது. அவன் 47-வது சங்கீதத்தில், 'மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, ஓ தேவனே, என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது" என்று சொன்னான், அந்த சங்கீதத்தின் தான் என்று நம்புகிறேன், அல்லது அங்கே ஏதோவொரு இடத்தில் அவ்வாறு சொன்னான். அவன் தன்னுடைய இசையை இசைப்பதன் மூலமாக அசுத்த ஆவிகளைத் துரத்தினதில் வியப்பொன்றுமில்லை; அவன் அதைக் குறித்து இசைக்கும்படியாக ஏதோ ஓன்றைக் கொண்டிருந்தான். அது அவனுடைய இருதயத்திலிருந்து வந்தது. அது அவனுடைய இருதயத்திலிருந்து வந்ததை பிசாசு அறிந்திருந்தான். தாவீது தேவனால் தெரிந்து கொள்ளப் பட்டிருந்தான் என்று அவன் அறிந்திருந்தான். அங்கே அவன் தெரிந்து கொள்ளப்பட்டு, அழைக்கப்பட்டு, அபிஷேகிக்கப்பட்டு, ஏற்கனவே இராஜாவாக ஸ்தானத்தில் பொருத்தப்பட்டிருந்தான். ஆமென். 28. நான் இதை இந்தப் பக்கத்தில் வைத்து விடட்டும். நான் உணர்ச்சி வசப்படுவதாக நினைக்க வேண்டாம்; நான் உணர்ச்சி வசப்படவில்லை. கவனியுங்கள், நான் இதை ஒரு புறமாக வைத்து விடட்டும். களைத்துப் போனவர்கள்... இங்கே இருக்கும் எத்தனை பேர் விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்பட்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறீர்கள்-? கரத்தை மேலே உயர்த்தியிருக்கிற நீங்கள் ஒவ்வொருவரும் விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்பட்டிருக்கிறீர்கள். அது சரிதானா-? வேத வாக்கியம், "எவர்களை அழைத்தாரோ, அவர்களை நீதிமான்கள் ஆக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கியிருக்கிறாரோ, அவர்களை மகிமைப் படுத்தியுமிருக்கிறார்” என்று கூறுகிறது. ஆமென். சர்வ வல்லமையுள்ள தேவனுடைய பிரசன்னத்தில், உங்கள் நாமமானது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தைக் கொண்டு நிரந்தரமாக எழுதப்பட்டு விட்டது, நீங்கள் அவருடைய சமுகத்தில் மகிமைப்படுத்தப்பட்டு, இங்கே பூமியிலே ஒரு நோக்கத்திற்காகவே, தேவனுடைய சித்தத்தைச் செய்யும் படியாக ஸ்தானத்தில் பொருத்தப் பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்தவனே, உன்னுடைய ஸ்தானத்தை நீ பார்க்கிறாயா-? 29. ஓ, என்னே. அங்கே மேலேயிருந்த அந்த மனிதர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியாது இருந்தது, ஆனால் தாவீதோ தன் மேல் அபிஷேக தைலத்தைக் கொண்டிருந்தான். அவன் எங்கே நின்று கொண்டிருந்தான் என்பதை அறிந்திருந்தான். பழங்கால கோலியாத் அங்கே நின்று கொண்டிருந்தான். அவன், "இப்பொழுது, கவனியுங்கள், நாம் முடிவு செய்வோம். ஏன், தேவனுடைய இராணுவன் தோற்கடிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. நல்லது, அங்கே தன்னுடைய பெரிய வீம்பு பேச்சைப் பேசிக் கொண்டு நின்று கொண்டிருக்கிற அந்த மனிதனைப் பாருங்கள்” என்றான். "நல்லது, தேவன் அதைச் செய்தார் என்பது நமக்குத் தெரியும், ஆனால் அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன.” அது தாவீதுக்கானதல்ல, அவன் அபஷேகம் பண்ணப்பட்டிருந்தான். அவன் ஸ்தானரீதியாக எங்கே இருந்தான் என்பதை அறிந்திருந்தான். 30. நீங்கள், "சகோதரன் பிரன்ஹாமே, நான் இப்பொழுது கிறிஸ்துவை என்னுடைய சுகமளிப்பவராக ஏற்றுக் கொள்ளலாமா-?" என்று கேட்கலாம். நிச்சயமாக. "நல்லது, நான் ஐந்து நிமிடங்களில் சுகமடையா விட்டால், அதைக் குறித்து என்ன-?" நீங்கள் எப்படியும் சுகமடைந்து விட்டீர்கள். நீங்கள் அதை விசுவாசித்தால், அந்தக் கேள்வியை என்னிடம் கேட்டிருக்க மாட்டீர்கள், நீங்கள் அதை விசுவாசித்திருந்தால். நீங்கள் உண்மையாகவே அதை விசுவாசிக்கும் போது, உங்கள் மனதில் எந்தக் கேள்வியும் இருக்காது. நீங்கள் அதைக் கேள்வி கேட்கக்கூடாது; நீங்கள் அதை விசுவாசியுங்கள். மற்ற ஜனங்கள் அதைக் கேள்வி கேட்கலாம், ஆனால் நீங்கள் அதைச் கேள்விகேட்கக் கூடாது. நீங்கள் என்னிடம், "சகோதரன் பிரன்ஹாமே, எனக்கு ஒரு கருவாலி மரத்தைத் தாரும்” என்று கூறுவீர்களானால். அவர்கள் பெரிய வெள்ளை நிற கருவாலி மரத்தையும் மற்றவைகளையும் உடையவர்களாக இருக்கும் இடமாகிய தெற்கு இந்தியானாவிலிருந்து நீங்கள் வந்திருக்கிறீர்கள். "எனக்கு ஒரு கருவாலி மரத்தைத் தாருங்கள். நானோ ஒரு கருவாலிக் கொட்டையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நல்லது, அப்பொழுது நீங்கள் மறைந்திருக்கிற ஒரு கருவாலி மரத்தைப் பெற்றிருக்கிறீர்கள். அது விதை வடிவத்தில் இருக்கிறது; ஆனால் அது ஒரு கருவாலி மரம் தான்; நீங்கள் அதை ஒரு கருவாலிக்கொட்டையில் பெற்றிருக்கிறீர்கள். நாம் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளும் போது, நாம் ஒரு விதை வடிவில் பெற்றிருக்கிறோம். நாம் தேவனுடைய வார்த்தையின் மூலமாக தெய்வீக சுகமளித்தலை ஏற்றுக் கொள்ளும்போது, அது அதைத் தீர்த்துவைக்கிறது. ஆமென். அது வளரும். அந்தப் பழைய கருவாலிக்கொட்டையை எடுத்து, அதை நிலத்தில் மண்ணிட்டு மூடி வைத்து, அங்கேயே சற்று தள்ளி நின்று கொண்டு, சற்றே அதைக் கவனித்து, என்ன நடக்கிறது என்று பாருங்கள். கருவாலி மரம் அதனோடு சரியாக மேலே வளர்ந்து வருகிறது. ஏனென்றால் அந்த ஜீவனானது அந்த விதைக்குள் இருக்கிறது, தேவனுடைய வார்த்தையானது ஒரு வித்தாய் இருக்கிறது, அது ஜீவனுள்ளதாயிருக்கிறது. நீங்கள் அப்படியே அதை வெறுமனே ஏற்றுக் கொண்டு, அதை வேதாகமத்தை விட்டு வெளியே எடுத்து, அது எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தது" என்று கூறுவீர்களானால், (ஆமென்), அப்பொழுது நீங்கள் ஏதோவொன்றைப் பெற்று விட்டீர்கள். அது சரியே. எல்லா பிசாசுகளாலும் அதை உங்களை விட்டு நிறுத்தவே முடியாது. யார் என்ன சொன்னாலும் அது ஒரு பொருட்டல்ல, நீங்கள் அதை விசுவாசிக்க மாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்திருக்கிறீர்கள். 31. தாவீது. அந்த விருத்தசேதனம் இல்லாத பெலிஸ்தியன் அங்கே வெளியே நின்று கொண்டு, ஜீவனுள்ள தேவனுடைய சேனைக்கு சவால் விடும்படி அவனை விட்டுவிடலாம் என்றா என்னிடம் சொல்ல வருகிறீர்கள்-? ஏன், நான் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டேன்" என்றான். எனவே அவனுடைய சகோதரன், 'உன்னுடைய குறும்புத்தனமான இருதயம் எனக்குத் தெரிந்தது தான்; நீ யுத்தத்தையும் மற்றவைகளையும் பார்க்கத் தான் வந்திருக்கிறாய்” என்றான். அவன் மேலே சவுலிடம் வந்தான். சவுல், "அந்தச் சிறு குழந்தையை இங்கே என்னிடம் அழைத்து வாருங்கள். அவன் எவ்விதம் காணப்படுகிறான் என்று பார்க்கட்டும்” என்றான். அவன் தாவீதை அங்கே அழைத்துச் சென்றான், சின்னஞ்சிறிய பையன். அவன், "நல்லது, உன்னால் அந்த மனிதனோடு சண்டையிட முடியாது. ஏன், அவன் அநேகமாக உன்னை ஒரு கையில் பிடித்து தூக்கி, தூர எறிந்து விடுவான் (hold out)” என்றான். அவன், ஆனால் கவனியும், சவுல் அவர்களே. நான் கர்த்தரை நம்புகிறேன்... கூட எனக்குத் தெரியும். நீண்ட காலத்திற்கு முன்பாகவே, நான் என்னுடைய கவண் வில்லை எடுத்து, ஒரு ஆட்டுக்குட்டியை - ஒரு ஒரு சிங்கத்தையும் ஒரு கரடியையும் கொன்று போட்டு, அந்தக் காரியங்களை, அந்த ஆட்டுக்குட்டியை, அதனுடைய வாயிலிருந்த வெளியே எடுத்தேன். பிறகு அது எழுந்த போது, ஏன், நான் அதைக் கொன்று போட்டேன்... அதைக் கொன்றுபோட்டேன். எனவே அந்த விருத்தசேதனம் இல்லாத பெலிஸ்தியனை அவர் எவ்வளவு அதிகமாக என் கையில் கொடுப்பார்-?” என்றான். 32. அல்லேலூயா-! அங்கே தான் காரியம். அவன் எங்கே நின்று கொண்டிருந்தான் என்பதை அறிந்திருந்தான். அவன் விசுவாசமுள்ள ஒரு மனிதனாக இருந்தான். அவன் தேவனை விசுவாசித்தான். தேவன் அவனுக்குள் இருந்தார். அவன் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தான் என்பதை அறிந்திருந்தான். அதே காரியத்தை நீங்களும் அறிவீர்கள். உங்களுக்கு... இருக்குமானால் நீங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருக்க தேவன் உங்களை தெரிந்து கொள்ளாதிருந்தால், நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்திருக்கவே மாட்டீர்கள். அது தேவனுடைய தெரிந்துகொள்ளுதலாக இருக்கிறது, உங்களுடைய தெரிந்து கொள்ளுதல் அல்ல. எந்த மனிதனும் தேவனைத் தேடுவதில்லை. எந்த மனிதனும் எந்த நேரத்திலும் தேவனைத் தேடுவதே கிடையாது. நீங்கள் தேவனைத் தேடவில்லை, ஆனால் தேவன் தான் உங்களைத் தேடியிருக்கிறார். அது நீங்கள் தேவனை அழைப்பது அல்ல; அது தேவன் உங்களை அழைப்பதாக இருக்கிறது. பிறகு தேவன் உங்களை அழைக்கும் போது, அவர் உங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறார் என்பதையே அது காண்பிக்கிறது. நீங்கள் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டீர்கள், அது தான் நீதிமானாக்கப்படுதலாக இருந்தது. அதன்பிறகு நீங்கள் உங்கள் இருதயத்தைக் கிறிஸ்துவுக்குக் கொடுத்து, பரிசுத்த ஆவியால் நிறையப்பட்டீர்கள். இப்பொழுது நீங்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் ஸ்தானத்தில் பொருத்தப்பட்டு விட்டீர்கள். இப்பொழுது, அது உங்களுடைய பழைய கீழ்த்தரமான பழக்க வழக்கங்களை நிறுத்தி, ஒரு கிறிஸ்தவன் எவ்வாறு நடந்து கொள்வானோ, அதைப் போன்று நீங்கள் நடந்து கொண்டு, அது உங்களுக்காக அதைச் செய்து இருக்குமானால், அது உங்கள் சரீரத்தையும் குணப்படுத்தும், ஏனென்றால் அது ஒரு வாக்குத்தத்தமாக இருக்கிறது. ஆமென். அங்கே தான் காரியம். 33. கவனியுங்கள், தாவீது தான் எங்கே நின்று கொண்டிருக்கிறான் என்பதை அறிந்திருந்து, ஆம், ஐயா” என்றான். தேவன் தன்னோடு இருக்கிறார் என்பதை அவன் அறிந்திருந்தான். எனவே அவன், "நான் போய் அந்த பெலிஸ்தியனோடு சண்டையிடுவேன்” என்றான். எனவே அது மற்ற எந்தப் பையனையும் போன்று இருக்கிறது, அவன் ஊழியத்துக்கான ஒரு அழைப்பைப் பெற்றுக் கொண்ட உடனேயே, அவர்கள் அவனை உடனடியான வேதாகமக் கல்லூரிக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது. உங்களுக்குப் புரிகிறதா-? எனவே அவர்கள் சவுலை எடுத்துக் கொள்ள, அவன், "இப்பொழுது, பொறுங்கள், நாம் இங்கே சண்டை போடுகிற விதமாகவே நீங்கள் சண்டை இட்டாக வேண்டும். இப்பொழுது, நீங்கள் செய்ய வேண்டிய முதலாவது காரியம் என்னவென்றால், நாம் உங்களுடைய போர் தலைக்கவசத்தை அணிந்து கொள்ள வேண்டும்” என்றான். அந்தப் பெரிய போர் தலைக்கவசத்தை அணிந்திருந்த அச்சிறிய தலையை உடைய தாவீதின் தலையின் மேல் அந்தப் போர் தலைக்கவசம் நழுவி விழுவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது, அநேகமாக அதைப் பார்க்கும் படியாக இவ்விதமாக அவன் தன்னுடைய தலையைப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவனுடைய கண்கள் அவன் காதுகள் மேல் வருகிறது. அதன் பிறகு அவனுடைய பெரிய தலைகவசம் (bonnet) அவனுக்குப் பொருந்தவில்லை. எனவே அப்போது சவுல், "என்னுடைய போர் கவசத்தை அணிந்து கொள்” என்றான். அநேகமாக ஐந்தரை அடி உயரமுடைய ஒரு சிறுவனோடு ஏழு அடிகள் உயரமுடைய ஒரு மனிதனை கற்பனை செய்து பாருங்கள், அவனுடைய போர் கவசம் இங்கே கீழே இந்தவிதமாக தொங்கிக் கொண்டிருக்க, அவன் மேல் ஒரு பாவாடை தொங்குவது போன்று அது காணப்பட்டது. உங்களால் அதைக் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா-? அப்படியானால் அவனுடைய பெரிய கேடயமும் அவன் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்த பட்டயமும்..... 34. தாவீது அவ்விதமாக உடையணிந்து, அந்த எல்லா வேதாகமக் கல்லூரி அனுபவங்களையும் அணிந்து பார்த்து, அவன், "இந்தக் காரியங்களைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லுகிறேன். வேத சாஸ்திரத்தையும் நீங்கள் எதைக் குறித்துப் பேசிக் கொண்டு இருக்கிறீர்களோ இந்த மற்ற வகையான காரியங்கள் எல்லாவற்றையும், இந்த எல்லா அருமையான ஜெபமாலை ஜெபங்களையும் எவ்வாறு பிரசங்கம் பண்ணுவது என்று எனக்குத் தெரியவில்லை. அந்த சிங்கத்தை என்னுடைய கையில் கொடுத்த அதே தேவனோடு உள்ள அதே நம்பிக்கையில் போகட்டும்” என்றான். சகோதரர்களே, இன்றிரவு அது தான் நமக்குத் தேவையாக இருக்கிறது. வேதக் கல்லூரிகளுக்கு விரோதமாகவும், உயர்நிலைப் பள்ளிகளுக்கு விரோதமாகவும், கல்விக்கும் மற்றவைகளுக்கு விரோமாகவும் எனக்கு எதுவும் கிடையாது. ஆனால் என்னவென்றால், தேவன் உங்களை அழைக்கும் போது, போய் விடுங்கள். மிஷனரியாக இருக்கும்படி ஏறக்குறைய 15 வருடங்கள் பயிற்சி பெற்று அவர்களை ஆப்பிரிக்காவுக்கு அனுப்புவதைக் குறித்து யாரோ ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். முட்டாள் தனம். தேவன் உங்களை அழைக்கும் போது, போங்கள். அவ்வளவு தான். சீஷர்கள் எந்தக் கல்விக்காகவும் ஒரு போதும் காத்துக் கொண்டிருக்கவே இல்லை; எதற்காகவும் எப்பொழுதாகிலும் எண்ணப்பட்ட அவர்களில் மற்ற எவரும் அதற்காக காத்துக் கொண்டு இருக்கவில்லை. தேவன் உங்களை அழைக்கிற போது, அவர் உங்களுக்காக ஆயத்தமாக இருக்கிறார்; அப்படியானால் துரிதமாக போய் விடுங்கள். முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் மிகவுமாக கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளும்படி போதிக்கப்பட்டு இருப்பீர்கள்; உங்களுக்குள்ளே இருக்கும் தேவனுடைய அந்தச் சிறு பாகமும் வெளியே எடுத்துப் போடப்பட்டு விடும். 35. அந்தவிதமான ஆடையை அணிந்து கொண்டு எவ்வாறு சண்டையிடுவது என்று தாவீதுக்குத் தெரியாதிருந்தது. அது ஒரு மனிதன் பிரசங்கம் பண்ண முயற்சிப்பது போன்று இருக்கிறது, நீங்கள் நின்று, உங்களால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு வேகமாக அதை வாசித்து, ஒலிப் பெருக்கியை ஏறிட்டுப் பார்த்து, உங்களால் எவ்வளவு வேகமாக வாசிக்க முடியுமோ அவ்வளவு வேகமாக வாசிக்க, வேண்டியிருக்கிற, அவர் மகத்தான பெரிய ஏராளமான காரியங்களை அவன் பெற்றிருக்கும் போது அவனால் எவ்வாறு பிரசங்கிக்க முடியும். உங்களால் அதைச் செய்ய முடியவில்லை; என்னாலும் அதைச் செய்ய முடியாதிருந்தது. செய்ய வேண்டிய மிகச் சிறந்த காரியம் என்னவென்றால், அங்கிருந்து வெளியேறி விட்டு, கர்த்தாவே, இதோ இருக்கிறேன். நான் என்ன சொல்ல வேண்டுமென்று உமக்கு விருப்பமாயிருக்கிறதோ, அதை என்னிடம் சொல்லும். நான் அதைக் குறித்தே அவர்களிடம் கூறுவேன்" என்று சொல்லுங்கள். ஆமென். காத்திருந்து, "இப்பொழுது, திரு. ஜோன்ஸ் அவர்கள் இங்கே என் பக்கத்திலிருந்து விலகி அப்பால் போகும் வரைக்கும் காத்துக் கொண்டிரும், அப்போது நான் அதை விசுவாசிப்பேன், ஆனால், நான் அப்போது, ஆமென்' என்று கூறுவேன்” என்று சொல்ல வேண்டாம். அதைச் செய்யும் படியாக தேவன் சொல்லி இருந்தால், எப்படியும், ஆமென்” என்று சொல்லுங்கள். அது சரியே. "நல்லது, அங்கே செல்வி சூசி உட்கார்ந்து கொண்டிருக்கிறாள் என்பது எனக்குத் தெரியும்; அவள் எனக்கு பக்கத்து வீட்டில் வசிக்கிறாள். சரியாக ஜீவியுங்கள். சரியான விதமாக ஜீவியுங்கள். உங்களுடைய வாழ்க்கையைக் குறித்து உங்களுக்கு வெட்கமில்லை, அப்படித் தானே-? உங்களுக்கு உங்கள் வாழ்க்கையைக் குறித்து வெட்கம் இருந்தால், உங்களுக்கு மனமாற்றம் அவசியமாய் இருக்கிறது. அது சரியே. நீங்கள், "ஆமென்” என்று கூறும்படியாக, செல்வி சூசி எதிர்ப்பார்த்திருப்பாள், நீங்கள் தேவனை விசுவாசித்து, நீங்கள் எதைக் குறித்துப் பேசிக் கொண்டு இருக்கிறீர்களோ, அதைப் பிறப்பிக்கும்படி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். வியூ. அந்தப் புழுக்குதல், அது அவ்வாறு இல்லையா-? ஆனால் அது உங்களுக்கு நன்றாக இருக்கிறது. அது சரியே. 36. தாவீது எங்கே நின்று கொண்டிருந்தான் என்பதை அறிந்திருந்தான். அவன், "ஆம், ஐயா, அந்த விருத்தசேதனம் இல்லாத பெலிஸ்தியனை தேவன் என் கையில் ஒப்புக்கொடுப்பார்” என்றான். எனவே அவன், "இந்தக் காரியங்களை என்னை விட்டு எடுத்து விடுங்கள்” என்றான். அவனுடைய ஸ்தாபன சம்பந்தமான உடுப்பு ஒரு தேவ மனுஷனுக்கு பொருத்தாமல் இருந்ததை சவுல் கண்டு கொண்டான். அது சரியே. தாவீது, "நான் இந்தச் சிறு கவண் வில்லில் நம்பிக்கை வைத்திருக்கிறேன், எனவே நான் சரியாக அதையே வைத்திருக்கப் போகிறேன்” என்றான். நான் உங்களுக்குக் கூறுகிறேன்; அது என்னை இரட்சித்த பரிசுத்த ஆவி, என்ன சம்பவித்தாலும் எனக்குக் கவலையில்லை . பரிசுத்த ஆவியைப் பெற்று, பிரபலமாக இருக்கும்படியாக வெளியே ஊழியக்களத்தில் வந்து, அதை மறுதலித்துப் போன ஒரு மனிதனை நான் அறிந்திருக்கிறேன். பழமை நாகரீகமான விதத்தில் பரிசுத்த ஆவியைப் பெற்று, வெளியே ஊழியக்களத்திற்கு வருகிற ஸ்திரீகளையும் மனிதர்களையும் அறிவேன், கொஞ்சம் பிரபலத்தினிமித்தமாக, அவர்கள் அதைக் குறித்த எதையும் மறுதலித்து விடுகிறார்கள். ஓ, தேவனிடம் இரக்கமுண்டு. என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்தது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் தான்; என்னைத் தொடர்ந்து கொண்டு சென்று கொண்டிருப்பதும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் தான். அவ்வளவு தான். ஆம், ஐயா. அது முன்பொரு காலத்தில் எனக்கு நல்லதாக இருந்திருக்குமானால், அது சரியாக இப்பொழுதும் எனக்கு நன்றாகத் தான் இருக்கிறது. என்னுடைய மரண வேளையிலும் அது அதே விதமாகவே இருக்கும். அது முன் பொருகாலத்தில் உங்களுக்கு நன்றாக இருந்தது, அது இப்பொழுதும் உங்களுக்கு நன்றாகவே இருக்கிறது, நீங்கள் மரித்துக் கொண்டிருக்கிற போதும், அது உங்களுக்கு நன்றாகவே இருக்கும். ஆமென். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். 37. இதோ நாம் இருக்கிறோம். தாவீது, "நிச்சயமாக, இந்தக் கவணை எவ்வாறு நம்புவது என்று எனக்குத் தெரியும்" என்றான். எனவே அவன் அங்கே வெளியே சென்று, தன்னுடைய - எடுத்து, சண்டைக்குப் போக ஆயத்தமானான். இப்பொழுது, சவுல், இப்பொழுது, அவர்கள் ஒரு மிஷனரியாகவோ, அல்லது அது என்னவாக இருந்தாலும், அதுவாகவோ ... ஆவதற்கு முன்பாக, அவன் எவ்வாறு போவது என்றும், என்னுடைய பயிற்சியை - மனிதர்களுக்கு பயிற்சி அளிக்கும் என்னுடைய திறமையை, அவர்கள் எம்மாதிரியான ஆயுத வர்க்கங்களை கொண்டிருக்க வேண்டும் என்பதையும் மறுத்து விட்டானே. அந்தக் குழந்தை இந்த உலகத்தில் என்ன செய்யப் போகிறான் என்று வியப்படைகிறேன்-?” என்றான். இப்படியிருக்க தாவீது அங்கே வெளியே ஓரமாக பார்த்து, சில கற்களைப் பொறுக்கி எடுத்துக் கொள்வதை நான் காண்கிறேன். சரியாக ஒரு நாட்டுப்புறப் பையன், சில கற்களைப் பொறுக்கி, தன்னுடைய சிறு கவணை இழுத்து, அவ்விதமாக அதை இழுத்துப் பார்க்கிறதை நீங்கள் கற்பனை செய்கிறீர்களா. அவன், "நல்லது, அவன் இதைக் கொண்டு என்ன செய்யப் போகிறான் என்று வியப்பாக உள்ளதே-?” என்றான். அவன் ஐந்து சிறிய கற்களைப் பொறுக்கிக் கொண்டான், ஐந்து சிறிய கற்கள். அவன் அவைகளை இங்கே தன்னுடைய பக்கவாட்டில் இருந்த தன்னுடைய சிறிய தோள்பையில் போட்டு வைத்துக் கொண்டான். அது ஒரு சிறிய ஒரு - ஒரு.... அது உண்மையாகவே அவ்வாறு தான் இருக்கிறது, அது ஒரு தொங்குபை (scrip bag) என்று வேத வாக்கியம் கூறுகிறது. அந்த அடைப்பப்பையில் (scrip bag) அவர்கள் எதைக் கொண்டு சென்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா-? நான் அடிக்கடி கூறினபடியே. மேய்ப்பர்கள் வழக்கமாக, அந்த அடைப்பப்பையில் தேனைக் கொண்டு செல்வார்கள். அவர்களுடைய ஆடுகளில் ஒன்று வியாதிப்பட்டால், அவர்கள் இந்த தேனில் கொஞ்சத்தை எடுத்து, அதை ஒரு பாறையில் தேய்த்து வைப்பார்கள். அதை உருக வைத்து, அதை அவ்விதமாக அந்தப் பாறையின் மேல் ஊற்றுவார்கள். இதோ அந்த ஆடு அது நெடுக வரும் போது, அந்த இனிப்பான காரியம் அதற்குப் பிடிக்கும்; எனவே அது இந்த சுண்ணாம்பு பாறையின் மேல் நக்கும்; அது அந்த தேன் எல்லாவற்றையும் அதை விட்டு நக்கி விடும் போது, அந்த சுண்ணாம்பும் அதற்குக் கிடைத்து விடும்; அது அந்த ஆட்டைக் குணமாக்கிவிடும். எனவே இப்பொழுது நான் இங்கே அடைப்பப்பை முழுவதும் தேனை வைத்திருக்கிறேன், நான் அதை கிறிஸ்து இயேசுவாகிய பாறையின் மேல் வைக்கப் போகிறேன்; வியாதியாயிருக்கும் ஆடுகளாகிய நீங்கள் மிகத் துரிதமாக நக்கிக் கொண்டிருங்கள்; அப்பொழுது கொஞ்சம் சுகம் அளித்தல் நடப்பதை நீங்கள் அங்கே கண்டு கொள்வீர்கள். அது சரியே. நாம் அதை எந்த சபையின் மேலும், எந்த ஸ்தாபனத்தின் மேலும் தடவ வேண்டாம்; அது எதைச் சேர்ந்ததாக இருக்கிறதோ, அந்த இயேசு கிறிஸ்துவாகிய பாறையின் மேல் அதைத் தடவுங்கள், அங்கு தான் எல்லா சுகமளித்தல்களும் கொண்டு இருக்கின்றன, கிறிஸ்து இயேசுவாகிய அந்தப் பாறையின் மேல் தான். 38. அவ்வண்ணமாக அவன் அப்போது ஒரு அடைப்பப்பையை (scrip bag) வைத்திருந்தான். அது மட்டுமல்ல, ஆனால் உண்மையில், அந்த அடைப்பப்பையின் ஒரு பாக்கெட்டில் பணத்தைக் கொண்டு போவார்கள். "பயணிகள் பை (scrip)" என்ற வார்த்தைக்கு பணம்” என்று அர்த்தம். எனவே அவன் பணத்தை அங்கே உள்ளே கொண்டு சென்றான். அது என்ன-? பணமானது வல்லமையின் கொள்முதல் காரியமாக (purchase) இருக்கிறது. இதோ தேவனுடைய அடைப்பப்பை இருக்கிறது. ஒவ்வொரு பிரயாணியும், அல்லது அங்கே வெளியிலுள்ள மேய்ப்பனும் ஒரு அடைப்பப்பையை வைத்திருக்கிறான். எனவே இப்பொழுது, நீங்கள் அங்கிருந்து எதையாகிலும் விரும்பினால், கொஞ்சம் கொள்முதல் செய்கிற வல்லமை, நீங்கள் வியாதிப்பட்டிருந்தால், இங்கே கீழே கைநீட்டி பார்த்து, நான் இந்த அடைப்பப்பையில் என்ன வைத்திருக்கிறேன் என்று பார்ப்போம். "உன்னைச் சுகமாக்குகிற கர்த்தர் நானே.” சரி, அதை வெளியே எடுங்கள். அது விலைக்கு வாங்குவதற்கான ஒரு வல்லமையாக இருக்கிறது. "நீங்கள் ஜெபம் பண்ணும் போது, நீங்கள் எவைகளை வேண்டிக் கொள்கிறீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வீர்கள் என்று விசுவாசியுங்கள். நீங்கள் அதை வாஞ்சித்தால், ஜெபம் பண்ணி, அதைப் பெற்றுக் கொண்டீர்கள் என்று விசுவாசியுங்கள்; அப்பொழுது அதைக் கொண்டு இருப்பீர்கள். அது தான் அடைப்பப்பையில் இருக்கிறது. அவன் அங்கே அந்தப் பாறைகளில் தடவி வைத்திருப்பதில் வியப்பொன்றுமில்லை, பாறைகளுக்கான ஒரு நல்ல இடம், அது அவ்வாறு இருக்கவில்லையா-? அந்த கற்கள், சிறு கற்கள்.... தேனிலே உருட்டி எடுக்கப்பட்ட, அந்த அடைப்பப்பையிலுள்ள கற்களாக நாம் இருக்கிறோம், அடைப்பப்பையில் பொதியப்பட்டிருக்கிறோம். என்னே, என்னே. ஒருக்காலும் ஒரு யுத்தத்திலும் தோற்றுப் போகாத, இயேசு கிறிஸ்துவாகிய மேய்ப்பர், ஆடுகளின் மேய்ப்பர், தம்முடைய சொந்த மகிமையான பாதுகாப்பில் இன்றிரவு சபையை பொதிந்து வைத்திருக்கிறார். 39. ஐந்து கற்களை எடுத்துக்கொண்டான்.... என்ன - ஐந்து என்பது எதைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது-? ஐந்து கற்கள், அவைகளில் ஒன்று J-ஆகவும், மற்றொன்று Eஆகவும், S-U-S ஆகவும் இருக்கிறது, இயேசு (Jesus), ஐந்து கற்கள்.... கிறிஸ்து இயேசுவாகிய இந்தக் கல்லில் நீங்கள் கற்களாக இருக்கிறீர்கள். அவன் அவைகளை தன்னுடைய சிறிய அடைப்பப்பையில் போட்டுக் கொண்டான், அவைகள் முழுவதுமாக தேனினால் மூடப்பட்டிருந்தன, அது மட்டுமல்ல, ஆனால் அவைகள் பரத்திலிருந்து வரும் வல்லமையால் போர்த்தப்பட்டிருந்தன. தேவனால் மீண்டுமாக சபையை ஒரே இசைவோடு ஒன்றாகக் கொண்டுவர முடியும் போது, அப்பொழுது அவர் பரத்திலிருந்து வரும் வல்லமையைக் கொண்டு போர்த்துவார்... எதற்காக வல்லமை-? அவருடைய வார்த்தையை விசுவாசிக்கவும், அதை நடப்பிக்கப் பண்ணவும். இதோ இப்பொழுது அவன் இந்த அடைப்பப்பையில் முழுவதும் சிறிய honey balls-கள் பொதியப்பட்டவனாக இருந்தான். இதோ, இந்த தேன் எல்லாமே அங்கே உள்ளே இருந்தது, இந்த அடைப்பப்பை முழுவதுமாக அங்கே உள்ளே அது இருந்தது. தாவீது அந்தக் கற்களை அங்கே தான் போட்டு விட்டு, கோலியாத் எங்கே நின்று கொண்டிருக்கிறான் என்று உற்றுப் பார்த்தான். இன்றிரவு நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு -ஒரு தாவீதாக இருக்கிறீர்கள். 40. தாவீது கோலியாத்தைச் சந்திக்கப் போன போது, கோலியாத் அவனைப் பார்த்து, நகைத்து, "ஏன், சிவந்த மேனியுடன் காணப்படுகிற பொடிப் பையனே, நீ இவ்விதமாக என்னை சந்திக்க வருவதற்கு நான் என்ன ஒரு நாயா-?” என்று கேட்டான். அவன் - அவன் சிவந்த மேனியுடைய சிறுவனாக இருந்தான். சவுல் அவனை எவ்வாறு அழைத்தான் என்று உங்களுக்குத் தெரியுமா-? 'யார் இந்தச் சிறுவன் (stripling)-?” என்று கேட்டான். அவ்வாறு தான் சவுல் சொன்னான். "அங்கே வெளியிலிருக்கிற அந்த வாலிபன் யார்-?" வெறுமனே சிறு வயதான குழந்தையைப் போலத் தான் அவன் இருந்தான், உங்களுக்குத் தெரியும், சிறு வயதுள்ள பெண் தன்மை கொண்ட சிறுவனாகவே அவன் காணப்பட்டான், அநேகமாக தோள்கள் வளைந்து காணப்பட்டான், இதோ அவன் இந்தச் சிறிய கவணைக் கொண்டு வருகிறான், ஆனால் அவன் தேவனை அறிந்திருந்தான்; அது தான் பிரதான காரியம். அவன் ஒரு விசுவாசியாக இருந்தான். அவன் தெரிந்து கொள்ளப்பட்டவனாக இருந்தான். அவன் அழைக்கப்பட்டிருந்தான். அவன் அபிஷேகம் பண்ணப்பட்டு இருந்தான், அவன் ஸ்தானத்தில் பொருத்தப்பட்டு இருந்தான். அல்லேலூயா-! நீங்கள் வெறுமனே... இருந்தாலும் அது ஒரு பொருட்டேயல்ல. 41. நீங்கள், "நல்லது, சகோதரன் பிரன்ஹாமே, நான் ஒரு பிரசங்கியாக இருக்க அழைக்கப்பட்டு இருக்கவில்லை” என்று கூறலாம். நீங்கள் ஒரு இல்லத்தரசியாக இருக்க அழைக்கப்பட்டு இருக்கலாம், ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவியின் மூலமாக கிறிஸ்து இயேசுவுக்குள் உங்கள் ஸ்தானத்தைப் பெற்றிருக்கிறீர்கள். ஆமென். மற்றவர்கள் எப்படி தாவீதைப் போன்று இருக்கிறார்களோ அவ்வளவாக நீங்களும் தாவீதைப் போன்று இருக்கிறீர்கள். 42. யுத்தம் தொடங்கி விட்டது; பெலிஸ்தியர்கள் அங்கே நின்று கொண்டு இருக்கிறார்கள். கோலியாத் தன்னுடைய தாக்குதலைத் தொடுத்து விட்டான். அவன் இறங்கி வருவதைக் கவனியுங்கள். எனவே இதோ தாவீது போகிறான். அவன் கீழே சென்றடைந்து அங்கு நோக்கிப் பார்த்தான், அவன் கோலியாத்தை அவ்விதமாக மேலும் கீழும் நோக்கிப் பார்க்கிறான். ஆனால் கோலியாத்துக்கும் அப்பால் வெற்றியையே கண்டான், ஏனென்றால் அவன் தேவனிடத்தில் நம்பிக்கை வைத்திருந்தான். அவன், "கோலியாத்தைக் காட்டிலும் அந்தச் சிங்கம் எவ்வளவு அதிகம் ஆபத்தாக இருந்தது. அது ஒரு காட்டு மிருகம். என்னுடைய இந்த கவண்கல்லை (shot) நேராக அந்த மிருகத்தின் தலைக்கு இயக்குவதற்கு நான் தேவனைத் தான் நம்பியிருந்தேன். இங்கேயும் இந்த கவண்கல்லை இயக்குவதற்கு என்னால் தேவனை நம்ப முடியும். ஒரு ஆட்டைக் காப்பாற்ற நான் அந்தச் சிங்கத்தைக் கொன்று போட்டேன். அது சரியே. அந்த ஆட்டைக் காப்பாற்ற தேவன் அனுமதித்தார், ஏனென்றால் அவர் அந்த ஆட்டைக் காப்பாற்றுவார் என்று நான் விசுவாசம் கொண்டிருந்தேன்” என்று எண்ணிக் கொண்டான். ஆடுகளின் நிமித்தமாக சில தாவீதுகளை தேவன் நமக்குக் கொடுப்பாராக. சரி. அவன், அப்போது அவர் தம்முடைய ஆட்டைக் குறித்து அக்கறை கொண்டிருப்பாரானால், ஜீவனுள்ள தேவனுடைய முழு சேனைகளையும் குறித்து அவர் எவ்வளவு அதிகம் அக்கறை உள்ளவராயிருப்பார். 'தெய்வீக சுகமளித்தல் கடந்து சென்று விட்டன. நான் உன்னோடு எந்தவிடத்திலும் அதைக் குறித்து விவாதம் செய்வேன்' என்று வீம்பு பேச்சையும் தற்பெருமையையும் பேசுபவனை அங்கே வெளியே வர நான் விடமாட்டேன்” என்றான். ஓ, என்னே. நீ இந்நாட்களில் ஒன்றில் ஒரு தாவீதைச் சந்திப்பாய். சரி. 43. இப்படியாக அவன் அங்கே வேகவேகமாக வந்து, அவனைப் பரிகாசம் பண்ணி, தன்னுடைய தேவர்களின் நாமத்தில் சபித்து, "நான் இன்று உன்னுடைய மாம்சத்தை பறவைகளுக்கும் வெளியின் மிருகங்களுக்கும் கொடுப்பேன் என்றான். தாவீது, "நீ ஒரு பெலிஸ்தியனாக, ஒரு ஆயுத வர்க்கத்தோடும், ஒரு ஈட்டியோடும், உன்னுடைய மனோ சாஸ்திரத்தோடும், வேத சாஸ்திரத்தோடும், அங்கே உன்னிடம் இருக்கிற மற்ற எல்லாவற்றோடும், ஒரு பெலிஸ்தியனுடைய நாமத்தில் என்னைச் சந்திக்கிறாய்” என்றான். ஆனால், "நானோ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் என்ற அந்த ஒரு காரியத்தோடு தான் உன்னைச் சந்திருக்கிறேன்” என்றான். அல்லேலூயா. "நான் அல்ல, ஆனால் அவர் இன்று உன் தலையை எனக்குக் கொடுப்பார்.” ஆமென். "நான் உன்னுடைய சரீரத்தையும், பெலிஸ்தியர்களாகிய உங்கள் எல்லாருடைய சரீரத்தையும் வெளியிலுள்ள காட்டு மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் புசிக்கும்படி எறிந்து போடுவேன்” என்றான். 44. அவன் எங்கேயிருந்தான் என்பதை அவன் அறிந்திருந்தான். அல்லேலூயா. இன்றிரவு இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தாவீதும், நீங்கள் கிறிஸ்துவுக்குள் ஸ்தான ரீதியாக இருக்கிறீர்கள். தேவன் அதை உறுதிப்படுத்தி இருக்கிறார். தெரிந்து கொள்ளுதல், அழைத்தல், அபிஷேகம் பண்ணப்படுதல், ஸ்தானத்தில் பொருத்தப்படுதல்: அவர் உங்களை தெரிந்து கொண்டு, உங்களை அழைத்தார். அவர் உங்களைத் தெரிந்து கொண்டு அழைத்திருக்கிறார். அதன் பிறகு அவர் உங்களை பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பண்ணுவித்தார். இப்பொழுதோ, அவர் உங்களை கிறிஸ்துவின் சரீரத்தில் பொருத்திவிட்டார், நீங்கள் ஒவ்வொருவரும் தாவீதுகளாக இருக்கிறீர்கள். கோலியாத் எங்கேயிருக்கிறான்-? "சகோதரன் பிரன்ஹாமே, கோலியாத் யார்-?" உங்களை முழுவதுமாகத் தின்று கொண்டிருக்கிற அந்தப் புற்றுநோயும் (அது சரியே.), உங்கள் மேல் தொங்கிக் கொண்டிருக்கிற அந்தக் கட்டியும், உங்கள் கண்கள் மேல் இருக்கிற அந்த கண்புரை நோய்களும், அந்த முடமான கையும் தான். எல்லாமே அதை நோக்கிப் பார்த்து, அது செய்யப்பட முடியாது" என்று கூறுகிறார்கள். பிசாசு, "நீ விசுவாசிப்பதை நிறுத்தி விடுவது நல்லது. நீ அமைதியாகிவிடுவது நல்லது, ஏனென்றால் உன்னால் இனி ஒரு போதும் சுகத்தைப் பெற்றுக் கொள்ளவே முடியாது. உன்னுடைய மருத்துவர் அவ்வண்ணமாகக் கூறிவிட்டார்; மற்றவர்கள் எல்லாருமே அவ்வாறு தான் கூறினார்கள். உன்னால் சுகத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது" என்று கூறுகிறான். ஆனால் உன்னுடைய குடிப்பழக்கத்தையும் புகைப்பிடிப்பதையும், பொய் சொல்லுவதையும், திருடுவதையும், நீ நிறுத்தும்படி செய்த கிறிஸ்து, குடிப்பழக்கம் உடைய ஒரு ஜீவியத்திலிருந்தும், கோபத்திலிருந்தும், பாவத்திலிருந்தும், பிசாசின் சவக் குழியிலிருந்தும் உன்னை இரட்சித்தாரே, தேவன் உனக்காக அதைச் செய்யக் கூடுமானால், உன்னுடைய காசநோயில் இருந்தும், உன்னுடைய புற்று நோயிலிருந்தும் அவரால் உன்னை இரட்சிக்க முடியும். அவன் தான் கோலியாத்; அவனுடைய வீம்பு பேச்சை ஏற்றுக் கொள்ளாதீர்கள். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நின்று, ஒரு பலப்பரீட்சைக்காக அவனுக்கு சவால் விடுங்கள். ஆமென் அல்லேலூயா. நான் பக்தி பரவசப்படுகிறேன். கிறிஸ்துவுக்குள் ஸ்தானத்தில் இருத்தல். விசுவாசி தன்னுடைய ஸ்தானத்தை அறிந்திருந்தால், அவன் அதைக் கொண்டிருப்பான். தேவனுடைய மகத்தான ஆவியானது இங்கே இருந்து, பரிசுத்த ஆவியும் அதை விசுவாசிக்கும் எவர் மேலும் விழ ஆயத்தமாயிருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? ஆமென். தேவன் அதை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். தேவன் அதைச் செய்வார். நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கிறீர்கள். 45. கோலியாத் தற்பெருமை பேசிக் கொண்டிருக்கிறான். கோலியாத், "நீ பார், நீ சென்ற இரவில் இங்கே இருந்தாலும் சுகத்தைப் பெற்றுக் கொள்ளவில்லையே நீ வேறு கூட்டங்களிலும் இருந்து இருந்தாலும், சுகத்தைப் பெற்றுக் கொள்ளவில்லையே” என்று கூறுவான். விருத்தசேதனம் இல்லாத அந்தப் பிசாசு யார்-? தேவனோடு சம்பந்தமே இல்லாத அந்தப் பிசாசு யார்-? தனக்குப் பின்னால் தோற்கடிக்கப்பட்ட காரியத்தையே தவிர வேறொன்றயையும் உடையதாயிராமல் நின்று கொண்டிருக்கிற அந்தப் பிசாசு யார்-? அவனுடைய எஜமான் கல்வாரியில் நம்முடைய ஆண்டவரும் நம்முடைய வெற்றி வீரருமாயிருப்பவராலே, தோற்கடிக்கப்பட்டு விட்டான். அல்லேலூயா. அவன் ஒரு பொய் கூறி ஏமாற்றுகிறவன். அவ்வளவு தான். நாம் இனியும் அவனை நம்பமாட்டோம், அடிபணியவும் மாட்டோம். சாத்தான் கொண்டிருந்த எல்லாவற்றையும் இயேசு கிறிஸ்து பறித்து விட்டார். அவர் அதிகாரங்களையும் வல்லமைகளையும் ஆட்சி உரிமைகளையும் கொள்ளையாடி விட்டார். வானங்கள் மற்றும் பூமியின் மேல் அவனுடைய இராஜ்ய ஆளுகைகளை அவர் அழித்துப் போட்டு விட்டார். நாம் அவருடைய இராஜ்யத்தின் பிரஜைகளாக இருக்கிறோம். அல்லேலூயா. என்னே, அவன் எந்தவிடத்தைச் சேர்ந்திருக்கிறானோ அங்கேயே அது அவனை வைத்துவிடுகிறது; பிசாசு அங்கே கீழே தான் இருக்கிறான் கிறிஸ்துவோ வெற்றி வீரராக இருக்கிறார். நீங்கள் தாவீதுகளாக இருக்கிறீர்கள். நீங்கள் அழைக்கப்பட்டு, தெரிந்து கொள்ளப்பட்டு, அபிஷேகம் பண்ணப்பட்டு, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் மூலமாக இயேசு கிறிஸ்துவின் சரீரத்தில் ஸ்தானத்தில் பொருத்தப்படுகிறீர்கள். கோலியாத்தே, நீ தோற்கடிக்கப்பட்டு விட்டாய். ஆமென். அவன் இன்றிரவு தோற்கடிக்கப்பட்டு விட்டான். அல்லேலூயா. நாம் ஜெபம் செய்வோம். 46. பரலோகப் பிதாவே, ஆவியானவர் அசைவாடுவதை உணருகிறேன், ஓ கர்த்தாவே, உமது ஆவியானவர் இந்தக் கூட்டத்தினரை அபிஷேகம் பண்ணிக் கொண்டிருப்பதை உணரும்படியான மத்திய ஆகாயத்தில் உம்மால் நடக்க முடிவது போன்றே தோன்றுகிறது. நாங்கள் எப்படியாக உம்மை நேசிக்கிறோம், நாங்கள் எப்படியாக உம்மைத் துதிக்கிறோம். உம்முடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. பரலோகத்தின் தேவனே, இன்றிரவு நீர் இதற்கு முன்போ , அல்லது ஜீவியத்தில் எந்த நேரத்திலும் இந்தக் கட்டிடத்தில் நாங்கள் ஒரு போதும் உணர்ந்திராதது போன்ற அப்படிப்பட்ட வல்லமையோடு இந்தக் கூட்டத்தினரை அபிஷேகம் பண்ண வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இந்தப் பிள்ளைகள் ஒவ்வொருவரும், தாவீதைப் போன்று அழைக்கப்பட்டு இருப்பார்களாக. பிதாவே, அவர்கள் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். உமது நேச குமாரனாகிய கர்த்தராகிய இயேசு, "என்னுடைய பிதாவானவர் ஒருவனை அழைத்தாலொழிய எவனும் என்னிடத்தில் வர முடியாது” என்று சொல்லி இருக்கிறார். அவர், அவர்களை அழைத்திருப்பதாக தேவன் கூறியிருக்கிறார், ஏனென்றால் அவர் அவ்வண்ணமாக அவர்களைத் தெரிந்து கொண்டிருக்கிறார். அப்படியானால் நாங்கள் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறோம். அதன் பிறகு அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அழைப்பிற்குப் பதிலளித்து விட்டார்கள். நீர் அவர்கள் மேல் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை ஊற்றி, கிறிஸ்துவின் சரீரத்திற்குள் அவர்களை ஞானஸ்நானம் பண்ணியிருக்கிறீர். அவர்கள் ஸ்தான ரீதியாக அந்தப் பெரிய கல்லில் உள்ள சிறு கற்களாக இருக்கிறார்கள். அல்லேலூயா. 47. அதன்பிறகு பிசாசோ அங்கே நின்று கொண்டு, அவர்களைப் பார்த்து ஏமாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறான்..... நல்லது, தேவனாகிய கர்த்தாவே, இன்றிரவு அவர்களுடைய ஆவிகளைப் பொறுப்பு எடுத்து, நாங்கள் தாமே ஒவ்வொரு பெலிஸ்தியர்களையும் அந்த மதில் சுவர்களை நோக்கி வெட்டி வீழ்த்துவோமாக. அல்லேலூயா. மாசற்ற மகத்தான தேவ குமாரனும், மகத்துவமிக்க பிரதான தாவீதுமாகிய இயேசு கிறிஸ்து தாமே இன்றிரவு தம்முடைய வல்லமையோடு வந்து, ஒவ்வொரு அவிசுவாசத்தையும் வெட்டி வீழ்த்தி, கட்டுகளையும் இருளையும் இந்த ஜனங்களை விட்டு அறுத்தெறிவாராக. அந்த மகத்தான பரிசுத்த ஆவி வெளிச்சம் தாமே தமது பிரசன்னத்தைக் கொண்டு இக்கட்டிடத்தை பிரவாகித்து பெருக்கெடுப்பதாக. நாங்கள் இதற்கு முன்பு ஒரு போதும் கண்டிராதது போன்ற ஒரு இரவாக இது இருப்பதாக சர்வவல்லமையுள்ள தேவனே, உமது மகிமைக்காக இதை அருளும். உமது குமாரனுடைய நாமத்தில், அவருடைய மகிமைக்காகவும், உமது மகிமைக்காகவும், பரலோகம் மற்றும் சகல பரிசுத்த தூதர்களின் மகிமைக்காகவும். அப்படியானால், பிதாவே, இவர்கள் தாமே இயேசுவின் நிமித்தமாக சுகமடைவார்களாக. 48. என்னே, தாவீது, அவன் கோலியாத்தின் தலையை வெட்டியெடுத்த பிறகு, அவன் என்ன செய்தான் உங்களுக்குத் தெரியுமா-? அவன் அந்தத் தலையை எடுத்து, தன்னுடைய காலை அவனுடைய செத்துப் போன சரீரத்தின் மேல் வைத்து, மற்றவர்களுக்கு ஒரு சாட்சியாக அதை தூக்கினான். உங்களால் என்ன செய்ய முடியும் என்று பாருங்கள்” என்றான் அவன். அது சரியே. தேவனிடத்தில் விசுவாசம் உள்ளவர்களாக இருங்கள். அன்றொரு இரவில், இங்கே உள்ளே, மேயோ சகோதரர்களின் மருத்துவமனையிலிருந்து வந்த அந்த பரிதாபமான சிறிய பெண், அநேகமாக அவள் இங்கே இன்றிரவில் உட்கார்ந்து கொண்டிருக்கலாம். அவர்களால் செய்ய முடிந்த எல்லாவற்றையுமே அவர்கள் செய்தும், அவளுக்கு என்ன கோளாறு என்று அவர்களால் கண்டுபிடிக்கக் கூட முடியாதிருந்தது. அவர்கள் இங்கே வந்தார்கள். பிசாசு, "நான் உன்னைப் பிடித்துவிட்டேன்” என்றான். ஆனால் விசுவாசம் கேள்வியினால் வருகிறது, வார்த்தையைக் கேட்பதன் மூலமாக வருகிறது. அவள் தேவனை விசுவாசித்தாள். அவள் அந்தப் பிசாசின் தலையை வெட்டிப் போட்டு, அதை உங்களுக்கு முன்பாக மேலே தொங்க விட்டு, "பாருங்கள், நான் அந்தக் கட்டிலில் கட்டப்பட்டு இருந்தேன், இதோ நான் இப்பொழுது இருக்கிறேன், என்னால் தூங்கக்கூட முடியாதபடி மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன்” என்றாள். அது சரியே. 49. இன்று தேசத்தின் குறுக்கே ஆயிரக்கணக்கானவர்களைக் குறித்து என்ன-? இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற உங்களில் சிலர், அங்கே நீங்கள் குருடாகவும் கட்டில் கிடையாகவும் இருந்தீர்கள் என்றுள்ள உங்களுடைய கடிதங்கள் என்னிடம் இருக்கின்றன. நான் சென்ற முறை இங்கே இருந்த போது, நீங்கள் விசுவாசத்தின் பட்டயத்தோடு கூட உள்ளே நடந்து சென்று, அந்தக் கோலியாத்தின் தலையை வெட்டிப்போட்டு, இன்றிரவில் ஒரு சாட்சிக்காக மேலே தூக்கிப்பிடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். இராணுவத்திலுள்ள மற்றவர்கள் என்ன கண்டார்கள்-? அது செய்ய முடிந்ததை அவர்கள் கண்ட போது, அவர்கள், நம்மாலும் அதைச் செய்ய முடியும், நாமும் கூட இஸ்ரவேலர்கள்” என்றார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறீர்கள், ஆசீர்வாதத்திற்கான ஒரு உரிமை உங்களுக்கு உண்டு. "இப்பொழுது பட்டயத்தை உருவுங்கள்; நாம் முன்னே சென்று, இந்தக் கோலியாத்துக்களை இதை விட்டு கொன்று போடுவோம். அவர்கள் அவர்களுடைய செத்துப் போன சரீரங்களை சரி நேராக பள்ளத்தாக்குகளுக்கும், மேலே அந்த மலைப் பாகங்களிலும், வாசல்கள் வரையில் சிதறடித்தார்கள். உங்களாலும் அதைச் செய்ய முடியும். அது உங்களுடையதாக இருக்கிறது. அது உங்களுக்காகத் தான் இருக்கிறது; அது ஒவ்வொரு விசுவாசிக்குமானதாக இருக்கிறது. 50. பரிசுத்த ஆவியானவர் அங்கே நிற்கிற அந்தப் பழைய குருடான கட்டை வெட்டி எறியாமல் இன்றிரவு இந்தக் கட்டிடத்தை விட்டுப் போகாதீர்கள். அந்தக் காரியத்தை தூர எறிந்து விட்டு, "நான் தேவனை விசுவாசிக்கிறேன்” என்று கூறி, ஜெயத்தோடு கூடிய ஒரு மனிதனைப் போன்றோ, அல்லது ஒரு ஸ்திரீயைப் போன்றோ, ஒரு தேவ பிள்ளையைப் போன்றோ இங்கிருந்து வெளியே நடந்து செல்லுங்கள், விடியற்காலை நட்சத்திரம் உங்களை வழிநடத்திக் கொண்டு இருக்கிறார், மகிமையை நோக்கி தொடர்ந்து அதைப்போன்று அணிவகுத்துச் செல்லுங்கள். பிசாசு எழுந்து, "நல்லது, நான் உன்னைக் கொண்டிருந்தேன் என்று நினைத்தேன்” என்று கூறுவான். அப்பொழுது, "நீ கொண்டிருக்கவில்லை என்று நான் உனக்குச் சொன்னேன்” என்று கூறிவிட்டு தொடர்ந்து நடந்து கொண்டே இருங்கள். அது போதுமானது. அடுத்த கூட்டத்தில் திரும்ப மேலே வந்து, நீங்கள் கட்டப்பட்டிருந்த அந்தப் பழைய பிசாசின் அந்தப் பழைய தலையை உதறி விட்டு, "இதோ பாருங்கள். உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கிறதா-? அங்கே மேலேயிருந்த அந்த நபர் நான் தான். இங்கே உட்கார்ந்து கொண்டு, நான் ஒரு சில நாட்களைத் தவிர அதிக காலம் என்னால் ஜீவிக்க முடியாது என்று மருத்துவர் கூறியிருந்த அந்த நபர் நான் தான். இதோ நான் இன்னும் இன்றிரவு இருக்கிறேன்” என்று கூறுங்கள். அல்லேலூயா. அப்படியானால் யாரோ ஒருவர், "உங்களுக்குத் தெரியுமா, அவளால் அதைச் செய்ய முடியுமானால், என்னாலும் கூட அது முடியும்; எனவே நான் அவரை நம்புவேன்” என்று கூறுவார். ஆமென். இன்றிரவு என்ன காரியம் என்பது உங்களுக்குத் தெரியாது. ஓ, பரிசுத்த ஆவியானவர் எப்படியாக இப்பொழுதிருக்கிற இவ்விதமான ஒரு கூட்ட ஜனங்களுக்குள் வர விரும்புகிறார். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை மாத்திரம் உங்களால் உணர்ந்து கொள்ள முடியுமானால். உணர்ந்து கொள்ள மாத்திரம்... இந்தக் கட்டிடத்தில் கூறுவது அல்ல, நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கிறீர்கள். ஸ்தான ரீதியாக எல்லாமே உங்களுடையதாக இருக்கிறது, உங்கள் யாவருக்குமானதாக அது இருக்கிறது; அது உங்களுக்குச் சொந்தமானதாக இருக்கிறது. இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? சகோதரன் ஆர்கன் இசைக்கருவியை மீட்டுகையில் (give the key), நாம் ஒரு பல்லவியைப் பாடுகையில், நம்முடைய கரங்களை உயர்த்துவோம். "கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன்” என்று அல்ல, ஆனால், சரியாக இப்பொழுதே நான் விசுவாசிக்கிறேன்.” தங்கள் கரங்களை மேலே உயர்த்தியிருக்கிற ஒவ்வொருவரும். எங்களுக்கு ஒரு ...ஐக் கொடுங்கள். இப்பொழுது எல்லாரும். சரி. இப்பொழுது விசுவாசிக்கிறேன், இப்பொழுது விசுவாசிக்கிறேன், யாவும் கைகூடிடும், இப்பொழுது விசுவாசிக்கிறேன்; இப்பொழுது விசுவாசிக்கிறேன், இப்பொழுது விசுவாசிக்கிறேன், யாவும் கைகூடிடும், இப்பொழுதே விசுவாசிக்கிறேன். 51. ஓ, எவ்வளவு அற்புதமாயுள்ளது. நாம், "கூட்டத்தினரை அனுப்பிவைப்போம், ஒருவருக்கொருவர் கரங்களைக் குலுக்கி வீட்டிற்குச் செல்லுங்கள்" என்று கூறுவோமானால், இங்கே இன்றிரவில் அநேக, அநேக சுகமளித்தல்கள் இருக்கும் என்று நம்புகிறேன். நிச்சயமாக, நான் அதை என்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். இப்பொழுது, யாராவது ஒருவர் இங்கே முதல்முறையாக இருக்க நேரிட்டிருக்கலாம், ஒருக்கால் அவர்கள் விசுவாசத்தில் பலவீனமாகவும், புரிந்து கொள்ளாதவர்களாகவும் இருக்கலாம், நாம் ஒரு ஜெப வரிசையை அழைத்து, நீங்கள் காண்கிற ஜனங்களில் சிலருக்காக ஜெபிப்போம். அங்கே முற்காலத்தில் இயேசு என்ன சொன்னார்-? அவர் என்ன வாக்குத்தத்தம் கொடுத்திருக்கிறார்-? அவர் தாவீதுக்குக் கொடுத்தது போன்று தான். அவர், "நான் செய்கிறவைகளை நீங்களும் கூட செய்வீர்கள். பிதாவானவர் செய்வதை நான் காணும் மட்டுமாக நான் எதையும் செய்வதில்லை. பிதாவானவர் எனக்கு எதைக் காண்பித்தாலும், நான் அதைச் செய்கிறேன்” என்றார். 52. அந்த ஸ்திரீ அவரிடத்தில் நடந்து சென்று, அவரிடம் பேசத் தொடங்கினாள், அவர் சொன்னார்... அவர் அவளிடம் சற்று நேரம் பேசின பிறகு, அவளுடைய தொல்லையை அவள் கண்டு பிடித்து, "போய், உன்னுடைய புருஷனை அழைத்து வா என்றார். அவள், "எனக்கு எந்த புருஷனும் கிடையாது” என்றாள். அது சரிதான், உனக்கு ஐந்து புருஷர்கள் இருக்கிறார்கள்” என்றார். அவள், "நீர் ஒரு தீர்க்கதரிசி. மேசியா வரும் போது, இதைச் செய்வார் என்று நான் அறிவேன். இது மேசியாவின் அடையாளம்” என்றாள். அதற்கு அவர், “உன்னுடன் பேசுகிற நானே அவர்” என்றார். ஆமாம். 53. சிறு வயதான பிலிப்பு அங்கே வெளியில் சென்று, அவன் - அவன் இரட்சிக்கப்பட்டான், அவன் ஒரு மிகச் சிறந்த நேரத்தைக் கொண்டிருந்தான்: தேவனுடைய இராஜ்யம் அவனுடைய இருதயத்தில் இருந்தது; அவன் களிகூர்ந்து கொண்டிருந்தான். அவன் தன்னுடைய நண்பனைக் காணச் சென்றான். அவன் சுற்றிலும் எல்லாவிடங்களிலும் பார்த்தான்; அவன் வந்திருந்த நாட்டுப் புறத்திற்குச் சென்றான். அவன், "சொல்...” என்றான். ஜெபத்தின் கீழிருந்த - மரத்தின் கீழே ஜெபித்துக் கொண்டிருந்த, அத்தி மரத்தின் கீழே ஜெபித்துக் கொண்டிருந்த நாத்தான் வேலை அவன் கண்டு பிடித்தான், ஒருக்கால் அவனுடைய வீட்டிற்குப் பின்னால், ஏதோவொரு இடத்தில் இருந்திருப்பான். அநேகமாக, திருமதி. நாத்தான்வேல் சொன்னாள், அவன் மேலேறிச் சென்று கூறினான்... பிலிப்பு, "நாத்தான்வேல் எங்கே-?” என்று கேட்டான். "அவர் சற்று முன்பு வெளியே அந்த அத்தி பழத்தோட்டத்திற்கு நடந்து போனார்” என்றாள். எனவே இதோ வருகிறான், அவன் நெடுக பார்த்துக் கொண்டே நடந்து வருகிறான்-? பிலிப்பு நாத்தான் வேலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அங்கே நாத்தான்வேல் ஒரு மரத்தின் கீழிருந்து ஜெபித்துக் கொண்டிருந்தான். அவன் மேலே வந்து கொண்டிருப்பதை அவன் கேட்டு, அவன் எழுந்து, 'ஏன், ஹலோ, பிலிப்பு, நீ எங்கிருந்து வருகிறாய்-?” என்றான். "ஓ, இங்கே வா; நான் ஒரு காரியத்தை உன்னிடம் கூற விரும்புகிறேன். நான் யாரோ ஒருவரைக் கண்டு பிடித்தேன். இந்த நாளின் - இந்நாட்களில் என்ன சம்பவிக்கும் என்று வேத வாக்கியங்கள் கூறுவது உனக்குத் தெரியுமா-? நாசரேத்தூர் இயேசு, யோசேப்பின் குமாரன் இங்கே வெளியில் இருக்கிறார், அடையாளங்களும் அற்புங்களும் அவரோடு இருக்கிறது, அவர் தேவனிடத்திலிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியும்" என்றான். அவன், “அவர் எங்கிருந்து வருவதாக நீ சொன்னாய்-?” என்று கேட்டான். அவன், "நாசரேத்” என்றான். அவன், "நல்லது, நாசரேத்திலிருந்து நன்மையான எதுவும் வர முடியுமா-?” என்றான். "வா, என்னோடு வா. இனியும் கேட்காதே. வா, வந்து கண்டு பிடி" என்றான். பார்த்தல் என்பது விசுவாசித்தலாக இருக்கிறது என்று நினைக்கிறீர்கள். 54. இப்படியாக அவன் மேலே நடந்து செல்கிறான், அவன் மேலே நடந்து போக, இதோ பிலிப்பு செல்கிறான், நாத்தான்வேலும் கூட நடந்து போகிறான், அவர்கள் மேலே அந்தக் கூட்டத்துக்குள் நடந்து சென்ற போது, இயேசு இவ்விதமாக நின்று கொண்டிருக்கிறார். சற்று கழிந்து, இயேசு கூட்டத்தினரை சுற்றும் முற்றும் நோக்கிப் பார்த்து, பிலிப்பு அங்கே நின்று கொண்டிருப்பதையும், நாத்தான்வேல் ஆர்வத்தோடு அங்கு நின்று கொண்டிருப்பதையும் கண்டார், உங்களுக்குத் தெரியும், அவர் நினைத்தார்... உங்களுக்குத் தெரியும், அவர் யாரோ ஒருவரை சுகப்படுத்துவதையோ அல்லது ஏதோவொன்றையோ அவர்கள் ஒருக்கால் கண்டிருப்பார்கள், அவன், "நான் ஒருவிதத்தில் அதை விசுவாசிக்கிறேன் என்று உனக்குத் தெரியும்” என்றான், ஒருக்கால் ஏதோவொரு ஸ்திரீ மேலே வர, அவர், "இப்பொழுது, ஸ்திரீயே, நீ குறிப்பிட்ட - குறிப்பிட்ட வியாதிகளினால் பீடிக்கப்பட்டிருக்கிறாய், உன்னால் விசுவாசிக்கக் கூடுமானால்" என்று கூறினார். சரி, அவள் அதை ஏற்றுக் கொள்கிறாள். இப்பொழுது, நாத்தான்வேல், "இப்பொழுது, அதைக் குறித்து என்ன-? இப்பொழுது, ஒரு நிமிடம் பொறு. அவருக்கு என்னைக் குறித்து தெரிந்திருக்காது என்று நான் பந்தயம் கட்டுகிறேன்” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அவர் சுற்றும் முற்றும் பார்த்து, "இதோ, கபடற்ற இஸ்ரவேலன்” என்றார். அவன், "ரபீ, உமக்கு என்னை எப்படித் தெரியும்-?” என்று கேட்டான். "ஓ" அவர், "பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ... மரத்தின் கீழ் இருக்கும் போது" என்றார். அவன், "நீர் தேவனுடைய குமாரன். நீர் இஸ்ரவேலின் இராஜா” என்றான். 55. இதோ சீமோன் இவ்விதமாக மேலே நடந்து வருகிறான், உங்களுக்குத் தெரியும்; அவன், "ஏன், நீ யோனா, அல்லது யோனாவின் குமாரனாகிய சீமோன். ஆனால் இது முதற்கொண்டு நீ கேபா என்னப்படுவாய்” என்றார். அல்லது பேதுரு என்று நான் கருதுகிறேன். "நீ கேபாவாக இருக்கிறாய்.... ஆனால் நீ இப்பொழுது முதல் ‘சிறிய கல்' என்று அர்த்தம் கொண்ட பேதுரு என்னப்படுவாய்” என்றார். பாருங்கள்-? அவருக்கு எப்படி அவனைத் தெரியும்-? அவனுடைய பெயரைக் குறித்து அவருக்கு எப்படி தெரிந்திருந்தது-? ஏன், அவர் அவனுடைய பெயரை அறிந்து இருந்தார்; அவன் எங்கிருந்து வருகிறான் என்றும் அவருக்குத் தெரிந்திருந்தது. அதன் பிறகு அவர் ஏராளமான முடமானோரைக் கடந்து சென்றார். அவர் ஒரு மனிதனிடம் அனுப்பப்பட்டு, அவனைக் குணமாக்கினார். அது பரிசுத்த யோவான் 5, அவன் ஒரு கோரைப்பாய் போன்ற படுக்கையில் (pallet) படுத்திருந்தான், அவர் அங்கிருந்த அந்த ஊனமுற்றோர் அனைவரையும் விட்டு கடந்து சென்று விட்டார். நல்லது, அது கேள்விக்கு உரியதாக இருந்தது. இந்த மனிதன் தன்னுடைய படுக்கையை ஓய்வு நாளில் சுமந்து செல்வதை அந்த யூதர்கள் கண்டு பிடித்தார்கள், எனவே அவர்கள் இயேசுவிடம் கேள்வி எழுப்பினார்கள், ஏன், அவர், "மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையே அன்றி அவர் வேறொன்றையும் தாமாய் செய்ய முடியாது: பிதாவானவர் தமது குமாரனுக்குக் காண்பிப்பது எதுவோ, குமாரனும் அந்தப்படியே செய்கிறார். பிதா கிரியை செய்து வருகிறார், குமாரனும் இது வரைக்கும் கிரியை செய்து வருகிறார்” என்றார். பாருங்கள்-? அவர், "நானாக எதையும் செய்ய முடியாது. என்னால் எதுவும் செய்ய முடியாது, ஆனால் பிதாவானவர் என்ன செய்வதாக நான் காண்கிறேனோ, அவ்வாறே நானும் செய்கிறேன் என்றார். 56. இப்பொழுது, அது நேற்றைய இயேசுவாக இருந்தது. அது இன்றைய இயேசுவாகவும் இருக்கிறது. அது தாவீதினுடைய அதே தேவன் தான், அவர் தாவீதின் வேரும் சந்ததியுமாய் இருக்கிறார். அது சரிதானா-? அவர் அதிகாலை விடிவெள்ளி நட்சத்திரமாக இருக்கிறார். அது சரிதானா-? அவர் A முதல் Z வரைக்கும் இருந்தார்; அது கிரேக்க எழுத்துக்களில் அல்பாவும் ஒமேகாவுமாயிருக்கிறது, A முதல் Z வரை, அல்பா, ஒமேகா, ஆதியும் அந்தமும், அவர் இருந்தவரும், இப்பொழுது இருக்கிறவரும், வருகிற வருமாயிருக்கிறார். அவர் தாவீதின் வேரும் சந்ததியுமாய் இருக்கிறார். ஓ, என்னே. அற்புதமானவர், ஆலோசகர், வல்லமையுள்ள தேவன், சமாதான பிரபு, நித்திய பிதா, அவருக்குள் எல்லாம் வாசம் செய்கிறது. சகோதரன் எக்பர்க் அவர்கள், "தேவனுடைய பரிபூரணம் எல்லாமே அவருக்குள் வாசம் செய்கிறது" என்று கூறுவது போன்றே, அது சரியே, தம்முடைய மகிமையிலிருந்து இறங்கி என்ற அவருடைய பாடலில் கூறுவது போன்றே. நாம் சகோதரன் எக்பர்க் அவர்களை இழக்கப் போகிறோம். தேவன் அவருடைய இருதயத்தை ஆசீர்வதிப்பாராக. நான் அவரை நேசிக்கிறேன். அவருடைய பாடல்கள் கூட்டத்திற்கு ஏதோ ஓன்றை செய்யத் தான் செய்கிறது. அவர் ஒரு உண்மையான மனிதர் என்பதை அறிவேன். நாம் மீண்டும் சந்திப்பது மட்டுமாக, தேவன் அவரோடு இருக்க வேண்டுமென்பதே என்னுடைய ஜெபமாக இருக்கிறது. 57. இப்பொழுது, பில்லி.... விநியோகித்தானா என்று தெரியவில்லை. நீ ஜெப அட்டை விநியோகித்தாயா-? என்ன, எது-? B-கள். சரி, எப்படி...-? எவைகளைக் கொடுத்தாய், ஒன்று முதல் நூறு வரையா-? நல்லது, நாம் ... ஐ எடுத்துக்கொள்வோம். அப்படியானால், நாம் ஒன்றில் துவங்குவோம். B, எண் ஒன்று; யாரிடம்.... உள்ளது-? இப்பொழுது, சென்ற இரவில் யாருமே மேடைக்கு வராமலேயே கூட்டத்தினரிடத்தில் ஒரு ஜெப வரிசையைக் கொண்டிருந்தோம். இன்றிரவு சிலரை மேலே கொண்டு வர முயற்சிப்போம், வெறுமனே, அது.... இருக்காது. யாரிடம், B, எண் ஒன்று உள்ளது-? உங்கள் கரத்தை உயர்த்துங்கள், ஜெப அட்டை B, எண் ஒன்று. அந்தச் சிறிய... எண் ஒன்று, இங்கே வாருங்கள். எண் 2, யாரிடம் எண் இரண்டு உள்ளது-? சரி, சீமாட்டியே, அல்லது, ஐயா, நீங்கள் தான் இரண்டு. மூன்று, எண் மூன்று, யாரிடம் எண் மூன்று உள்ளது, B, எண் மூன்று, நீங்கள் சீக்கிரமாக உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா-? மூன்று சரி. நான்கு, யாரிடம் நான்கு உள்ளது-? சரி, ஐயா. ஐந்து, யாரிடம்... உள்ளது-? (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) B, எண் 12, 13, 14, 15. நாம் இவ்விதமாக அதை ஒரு நிமிடம் முயன்று பார்ப்போம். 58. இப்பொழுது, அவர்கள் வந்து கொண்டிருக்கையில், விசுவாசிக்க மாத்திரம் செய் என்ற சிறு இசைத் தந்தியை எங்களுக்குத் தாருங்கள். இப்பொழுது, நான் என்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கப் போகிறேன். தாவீதைப் போன்று கிறிஸ்து இயேசுவுக்குள் ஸ்தானத்தில் இருக்கிறீர்கள் என்று எத்தனை பேர் இன்னும் விசுவாசிக்கிறீர்கள்-? நாம் பார்ப்போம். அப்படியானால் தாவீதுக்கு இருந்த நம்பிக்கையை விட பெரிய நம்பிக்கை உங்களுக்கு உண்டு. அப்போது இயேசு சிலுவையில் அறையப்படவோ அல்லது மகிமை அடைந்திருக்கவோ இல்லை; ஆனால் இப்பொழுதோ அவர் மகிமை அடைந்திருக்கிறார். தாவீதுக்கு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் இல்லாதிருந்தது, பரிசுத்த ஆவியானது இன்னுமாக அருளப்பட்டிருக்கவில்லை. அது சரி தானா-? அவன் வெறுமனே தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு அழைக்கப்பட்டிருந்தான். ஆனால் அவன் பரிசுத்த ஆவியால் நிறைக்கப்பட்டு இருக்கவில்லை. ஆனால் நீங்கள் அவ்வாறு இருக்கிறீர்கள், நீங்கள் கிறிஸ்துவுக்குள் ஸ்தானத்தில் இருந்து, மிகச்சிறந்த உடன்படிக்கையின் கீழாக ஜீவித்துக் கொண்டிருக்கிறீர்கள், கொடுக்கப் பட்ட ஒரே உடன்படிக்கையானது சரியாக இப்பொழுதே கொடுக்கப்பட்டதாக இருக்கிறது. தேவனிடத்தில் விசுவாசம் உள்ளவர்களாக இருங்கள். இப்பொழுது, ஒருக்கால் மிகத் துரிதமாக இதனூடாக வர முடியும்; உங்களால் இதனூடாக கடந்து வர முடியுமானால், ஒரு சில நிமிடங்களிலேயே நாம் வேறொரு வரிசையை அழைக்கலாம். சரி, கர்த்தர் உங்களோடு கூட இருந்து, இப்பொழுது உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் அப்படியே வேறொரு சிறு ஜெபத்தை ஏறெடுப்போம். 59. பிதாவே, இப்பொழுது அந்த நேரமானது எல்லா நேரமாக மறைந்து போய்க் கொண்டே இருக்கிறது, தாவீதோடு கூட இருந்த வானங்களுக்கும் பூமிக்கும் தேவனே, சர்வவல்லமையுள்ள பிதாவே, நீர் இரக்கமாயிருக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். தாவீது அதை அறிந்திருந்து, அவன் சரியாக விசுவாசத்தோடு வெளியே நடந்து சென்று, கர்த்தாவே, சவால் விட்டான், ஏனென்றால் நீர் அவனோடு இருந்தீர் என்றும் அவனுடைய ஸ்தானம் உமக்குள் இருந்தது என்றும் அவன் அறிந்திருந்தான். மேலும் இப்பொழுது, பிதாவே, நான் அப்படியே உமக்கு நன்றி கூறுகிறேன். ஏனென்றால் தாவீது அதைச் செய்தான் என்ற வார்த்தையை நீர் தான் எங்களுக்கு கொடுக்கிறீர், அவன் உம்முடைய இருதயத்திற்கு ஏற்றவனாய் இருந்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. இன்றிரவு எங்கள் விசுவாசம் அதே காரியத்தைச் செய்ய வேண்டுமென்று இன்று இரவில் நான் ஜெபிக்கிறேன். அதை அருளும், இங்கேயுள்ள ஒவ்வொரு வியாதிப்பட்ட நபரும், அங்கே பலவீனமான ஒரு நபரும் இருக்க வேண்டாமென்று ஜெபிக்கிறேன். கர்த்தாவே, நான் மிகவும் சிறியவனாக இருக்கிறேன். என்னால் செய்ய முடிந்த ஒரே காரியம், வார்த்தையைப் பிரசங்கித்து, அவர்களிடம் கூறுவது தான். இப்பொழுது நீர் கர்த்தருடைய தூதனானவரை அனுப்பி, இந்த வரத்தோடு கூட என்னை அபிஷேகம் பண்ணுவீரானால், அப்படியானால் பிதாவே, அப்பொழுது அது மறுபடியுமாக அவர்களுக்கு உதவி செய்யுமே. அதன் பிறகு அவர்கள் வியாதிப்பட்டவர்களாக வெளியே போவார்களானால், நீர் உம்முடைய பாகத்தை செய்து விட்டீர், கர்த்தாவே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இப்பொழுது, எங்களை ஏற்றுக் கொள்ளும்; இன்றிரவு எல்லாரும் ஆவியால் நிறையப்படுவார்களாக, ஒரு உண்மையான தெய்வீக விசுவாசத்தினாலும், உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவிடத்திலுள்ள அன்பினாலும் எல்லாருமே நிறையப்படுவார்களாக. நாங்கள் இதை அவருடைய நாமத்தில் கேட்கிறோம். ஆமென். சரி. நேரத்தை மிச்சப்படுத்தும்பொருட்டு, நான்... செய்யப் போகிறேன். சற்று பொறுங்கள். பரிசுத்த ஆவியானவர் இரண்டு வரங்களைக் கொடுத்திருக்கிறார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்-? நாங்கள் உங்கள்... பார்ப்போம். என்னுடைய சாட்சியிலிருந்து உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா-? அந்த வரங்களில் ஒன்று ஜனங்கள் மேல் உங்கள் கரத்தை வைத்தலாகும். நான் பிரசன்னத்தை உணரவில்லை, ஆனால் நான் ஒருக்கால் இந்த வேறொரு வழியைக் கண்டு பிடித்து, பிறகு ஒருக்கால் சற்று கழிந்து இந்த சீமாட்டியிடம் பேச முடியும், அல்லது ஏதோவொன்றைச் செய்ய முடியும். அங்கே இருக்குமானால், அது ஒரு வியாதியாக இருக்கிறது, ஏன், என்னால் அதை அறிந்து கொள்ள முடியும், அவ்வாறு இல்லாவிட்டால், நான் அதைச் செய்ய மாட்டேன். நீங்கள் ஜெபத்தில் இருப்பீர்களா-? எப்படியிருக்கிறீர்கள், சீமாட்டியே-? நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம் என்று நினைக்கிறேன். எனக்கு - எனக்கு உங்களைத் தெரியாது, நான் உங்களை என்னுடைய ஜீவியத்தில் ஒரு போதும் கண்டதில்லை. அது சரிதானே-? நாம் முற்றிலும் அந்நியர்களாய் இருக்கிறோம். நான் உங்கள் கரத்தைப் பிடிக்க விரும்புகிறேன், சற்று நேரம் அதை இங்கே வையுங்கள். ஆமாம், பெருமாட்டியே, நீங்கள்... இது ஒரு ஆவிக்குரிய நிலை அல்ல; இது ஒரு சரீர சம்பந்தமான நிலையாக இருக்கிறது. அது என்னவென்றால், ஒரு கட்டியாக இருக்கிறது. அது ஒரு வளர்ச்சி. இப்பொழுது, பாருங்கள், என்னால் அதைக் கிரகிக்க முடியுமானால்... நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் காண்பிக்கட்டும். என்னுடைய கையைப் பாருங்கள். இது எந்த மனிதனுடைய கையையும் போன்று அப்படியே காணப்படுகிறது, இல்லையா-? இப்பொழுது, நான் என்னுடைய கரத்தை அந்தக் கரத்தின் மேல் வைக்கப் போகிறேன். அங்கே எந்த வித்தியாசமும் இல்லையா-? இப்பொழுது, நான்.... உங்கள் பாக்கெட் புத்தகத்தை இங்கே இந்தப் பக்கத்தில் வைத்துவிடுங்கள். நான் இங்கே மேலே இந்தக் கரத்தைக் கொண்டிருக்கட்டும்; இந்தக் கரத்தை என்னுடைய கரத்தின் மேல் வையுங்கள். அங்கே எந்த வித்தியாசமும் இல்லையா-? சரி, இப்பொழுது, மீண்டும் மாற்றுங்கள், திரும்ப இந்தவிதமாக, வெறுமனே பரிசுத்த ஆவியானவர்.... என்னவென்று உங்களிடம் காண்பிக்கவே. இப்பொழுது, உங்கள் கரத்தை என்னுடைய கரத்தின் மேலே வையுங்கள். இப்பொழுது இதைப் பாருங்கள். இங்கே என்னுடைய கரத்தைப் பாருங்கள். வீங்குகிறது, சிறிய புடைப்பு அதன் மேல் எல்லா இடங்களிலும் ஓடுகிறது. அது சரி தானா-? இப்பொழுது, நீங்கள் அப்படியே உங்கள் கரத்தை எடுத்து விடுங்கள்; உங்கள் கையை எடுத்து விடுங்கள். நான் இதன் மேல் என்னுடைய கரத்தை வைக்கிறேன். இப்பொழுது அது இல்லை, இல்லையா-? பாருங்கள், இங்கேயுள்ள இந்த ஒன்றின் மேல் பாருங்கள், புரிகிறதா-? இது மறுபடியும் இல்லாதிருக்கிறது. இப்பொழுது, நாம் இந்தக் கரத்தை இங்கே வைப்போம், உன்னுடைய வலது கரம் என்னுடைய இடது கரத்தின் மேல் இருக்கிறது, இப்பொழுது, என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். இப்பொழுது, அப்படியே என்னுடைய கரத்தைப் பாருங்கள். அங்கே பார்க்கிறீர்களா-? அது வீங்குவதைப் பாருங்கள்; அந்தச் சிறு வெண்மையான காரியம் அதன் மேல் ஓடிக் கொண்டு இருப்பதை பார்க்கிறீர்களா-? உங்களுக்கு ஒரு வியாதி இருக்கிறது என்பதைத் தான் அது காண்பிக்கிறது. அது ஒரு நோய்க் கிருமியாக இருக்கிறது.... அது... இல்லாத உங்களுக்கு உள்ளிருக்கிற வேறு ஏதோவொரு ஜீவனாக இருக்கிறது. அது உங்கள் ஜீவன் இல்லை . பாருங்கள்-? அது வேறொரு ஜீவன். அது உங்களுக்குள் இருக்கிற ஒரு ஜீவனாக இருக்கிறது. 60. இப்பொழுது, நாம் ஒரு சில நிமிடங்கள் பேசி, அது எங்கே இருக்கிறது என்று பரிசுத்த ஆவியானவர் கண்டறிந்து, அவர் என்னிடம் சொல்லுகிறாரா என்று பார்ப்போம். அவர் கூறாவிட்டால், அது ஒரு கட்டி என்று நான் அறிவேன். அது தான் அது என்று எனக்குத் தெரியும், அது ஒரு கட்டி இழுக்கிற விதமாகவே இழுக்கிறது என்பதை என்னால் கூற இயலும். அது சரி தானா, அவ்வளவு அதிகமா-? நீங்கள் அப்படியே எனக்கு பதில் சொல்லுங்கள். அது சரியே, அது ஒரு கட்டி தான். சரி. இப்பொழுது, ஒருக்கால், இப்பொழுது அது ஒரு வரம் கிரியை செய்வதாகும். உங்களுக்குப் புரிகிறதா-? இப்பொழுது, என்னால் கூற முடியாததை பரிசுத்த ஆவியானவர் எனக்கு அருளினால். ஆனால் அவர் கூறுவாரானால், அது எங்கேயிருக்கிறது என்றும், அந்த கட்டி எங்கேயிருக்கிறது என்றும் என்னிடம் கூறுவாரானால்..... ஆம், ஐயா. அந்தக் கட்டி மார்பகத்தில் உள்ளது. அது சரியல்லவா-? இப்பொழுது, அவர் இங்கே இருக்கிறார். பாருங்கள்-? அது சரியே. நீங்கள் இங்கே சிகாகோவில் தான் வசிக்கிறீர்கள். உங்கள் பெயர் திருமதி. எரிக்சன். நீங்கள் ஒரு முகவரியில் வசிக்கிறீர்கள்; நீங்கள்... உள்ளே போய்க் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். அது.... என்று அழைக்கப்படுகிறது. அது 1653, மேட் தெரு, அது உண்மை தானா-? இப்பொழுது, வீட்டிற்குச் சென்று சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்து உங்களைச் சுகப்படுத்துகிறார். விசுவாசம் உள்ளவர்களாக இருங்கள். சந்தேகப்படாதீர்கள். தேவனிடத்தில் விசுவாசம் உள்ளவர்களாயிருங்கள். சரி, இங்கே வாருங்கள். எப்படி இருக்கிறீர்கள்-? நாம் அந்நியர்கள் தானே, ஐயா-? அங்கே இருக்கும் என்னுடைய சகோதரனே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? விசுவாசம் உள்ளவர்களாய் இருங்கள். நாங்கள் ஒரு நிமிடம் உங்கள் கரத்தைக் கொண்டிருக்கட்டும், ஐயா. உமக்கும் எனக்கும் இடையே, ஒரு ஒளி நின்று கொண்டிருக்கிறது. உமக்கு பலவீனம் இருக்கிறது; அது உண்மை; ஆனால் நீர் இங்கே வேறு ஏதோவொன்றிற்காக இருக்கிறீர், உமக்கு இருப்பதைக் காட்டிலும் ஒரு பெரிய காரியம். அப்படியே உமது வயதுடைய ஒரு மனிதருக்கு கொஞ்சம் சிறுநீரக கோளாறும், புரோஸ்டேட் சுரப்பி கோளாறும் இருக்க வேண்டும், அது இரவில் உம்மை பதற்றமடையச் செய்து, எழுந்திரிக்கவும் மற்ற காரியங்களைச் செய்யவும் வைக்கிறது. உமக்கு அது இருக்கிறது. ஆனால் அங்கே வேறு ஏதோவொன்று இருக்கிறது, ஏனென்றால் அது அப்படியே தொடர்ந்து அசைந்து கொண்டே இருக்கிறது, அது என்னிடம் இழுத்துக் கொண்டே இருக்கிறது. அது சரி அல்லவா-? நீர் விரும்புகிறீர்... உம்முடைய கோளாறுகள் எவைகளென்று தேவனால் என்னிடம் வெளிப்படுத்த முடியும் என்று நீர் விசுவாசிக்கிறீரா-? நீர் அதை உம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீரா, அவர் வெளிப்படுத்துவாரானால், அது என்னவாக இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்வீர்களா, அது தூரமாக போவதற்காக இருந்தாலும், அது ஒரு புது வீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக இருந்தாலும், அல்லது அது என்னவாக இருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல, உமது வாஞ்சையானது மிகவும் மகத்தானதாக இருந்து, நீர் அவருடைய பிரசன்னத்தில் தான் நின்று கொண்டிடிருக்கிறீர் என்று விசுவாசியும், நீர்.... என்று அவர் எனக்கு வெளிப்படுத்தித் தருவாரானால். என்னால் உம்மைச் சுகப்படுத்த முடியாது; அதற்கு அடுத்து, நீர் வாஞ்சிப்பதை என்னால் உமக்குக் கொடுக்க முடியாது, ஆனால் தேவனால் கூடும். நீர் அதை விசுவாசிக்கிறீரா-? இப்பொழுது, என்னால் அவருடைய ஊழியக்காரனாக மாத்திரமே செயல்பட முடியும். அது சரிதானா-? நீர் இங்கே யாரோ ஒருவருக்காக இருக்கிறீர், அது உமக்கு நெருக்கமானவர். அது ஒரு அது ஒரு மகன். அது உமது மகன். அந்தப் பையனுக்கு அவன் கண்களில் ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது. அது ஒரு தளப் பார்வை (Astigmatism)" என்று மருத்துவர் கூறியிருக்கிறார். அந்தப் பையன் உம்மோடு இல்லை; அவன் வீட்டில் இருக்கிறான். அந்தப் பையனுக்கு ஏதோவொரு விதமான மயக்கங்கள் இருக்கிறது, அவன்.... அது காக்கை வலிப்பு. அவன்... அவன் ஒருவிதத்தில் சற்றே மனரீதியாக சரியில்லாதவனாகவும் இருக்கிறான். அது சரி அல்லவா-? நீர் வேண்டிக் கொண்டதைப் பெற்றுக்கொ ள்ளப் போகிறீர் என்று விசுவாசிக்கிறீரா-? சரி, அப்படியானால் வீட்டிற்குப் போய், அந்தப் பிள்ளையின் மேல் உங்கள் கரத்தை வைத்து, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். 61. தேவனை விசுவாசியுங்கள். சற்றே ஒரு நிமிடம் உங்கள் தலையைத் தாழ்த்துங்கள். அந்த ஸ்திரீ தன் மேல் ஒரு செவிட்டு ஆவியைப் பெற்றிருக்கிறாள். நிச்சயமாக. சற்று நேரம் உங்கள் தலையைத் தாழ்த்துங்கள். வானங்களையும் பூமியையும், அவைகளிலுள்ள சகலத்தையும் உண்டாக்கின, மகத்தான யேகோவா தேவனே. இந்த ஸ்திரீ எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறாள் என்றோ, இவளுடைய காதுகள் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்றோ எனக்குத் தெரியாது, ஆனால் நீர் இங்கேயிருக்கிறீர், உம்மால் இவளைச் சுகப்படுத்த முடியும். நீர் அதை அருள வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இப்பொழுதே உமது ஆவியானவர் இவள் மேல் வரும்படி செய்து, இவளைச் சுகப்படுத்தும். இப்பொழுது நான் வேண்டிக்கொள்கிறேன், செவிடு என்ற வடிவத்தில் இவளைக் கட்டிவைத்திருக்கிற இந்த பிசாசே, "இந்த ஸ்திரீயை விட்டு வெளியே வா. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக, இவளை விட்டு வெளியேற நான் உனக்கு கட்டளையிடுகிறேன்.” இப்பொழுது நான் சொல்லுவது கேட்கிறதா, உனக்குக் கேட்கிறதா-? நான் கூறுவதை உன்னால் கேட்க முடிகிறதா-? அது மட்டுமல்ல, உனக்கு இப்பொழுது தெரிகிறது. உன்னுடைய காது கேட்கும் தன்மை உனக்கு இருக்கிறது. உனக்கு ஸ்திரீகளுக்குரிய கோளாறும் கூட இருந்தது, உனக்கு இருக்கவில்லையா-? அது உன்னை விட்டுப் போய்விட்டது. நீ அதை ஏற்றுக்கொள்கிறாய், அப்படித் தானே-? அது உன்னைக் குறித்து விநோதமாகக் காணப்படுகிறது. நீ... உனக்கும் எனக்கும் இடையில், பச்சை நிற தண்ணீர்கள் புரண்டு கொண்டிருக்கிறது. நீ ஏதோவொரு - லிருந்து வந்திருக்கிறாய், நீ... வந்திருக்கிறாய். நீ -நீ ஒரு மிஷனரியாக இருக்கிறாய். நீ.... லிருந்து இங்கே வந்திருக்கிறாய். நீ சீனாவிலிருந்து வந்திருக்கிறாய். நீ மஞ்சள் நிற ஜனங்களுக்கு, சீனர்களுக்கு ஊழியம் செய்து கொண்டிருந்தாய். நீ என்னிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறாய். நீ திரும்பிப் போகலாமா வேண்டாமா என்பதைக் குறித்து நீ சிந்தித்துப் பார்க்க வேண்டுமா என்று நீ என்னிடம் கேட்க விரும்புகிறாய். அது உண்மை. இப்பொழுது, நீ இயல்பாகவே திரும்பிப்போய் சுகமாயிருக்கப் போகிறாய் என்று விசுவாசிக்கிறாயா-? களிகூர்ந்தபடியே உன்னுடைய பாதையில் செல். தேவன் உன்னோடு கூட இருப்பாராக. விசுவாசம் கொண்டிருங்கள். 62. ஆம், ஐயா. வயிற்றுக்கோளாறு, அது மிகவும் மோசமாகவும், தீவிரமாகவும் இருக்கிறது... நான் மீண்டுமாக உன்னுடைய கரத்தைக் கொண்டிருக்கட்டும்: ஓ, ஆமாம், அது மிகவும் மோசமான வயிற்றுக் கோளாறு. இப்பொழுது தேவனால் மாத்திரமே உன்னைக் காப்பாற்ற முடியும். நீ அதை விசுவாசிக்கிறாயா-? என்னுடைய கரத்தை உன் கரத்தின் மேல் வைப்பதன் மூலம் உனக்கு வயிற்றுக்கோளாறு இருக்கிறது என்று எனக்கு எப்படி தெரிந்திருக்கும்-? என் சகோதரனே, அது முற்றிலும் சரியே. நீ சுகமடையப் போகிறாய் என்று நீ விசுவாசிக்கிறாயா-? உம்முடைய முதல் பெயர் ஆலன், இல்லையா-? உம்முடைய கடைசி பெயர் க்ரப்ஸ். அது சரி அல்லவா-? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீர் இல்லினாயிஸிலுள்ள வாகேகனிலிருந்து (Waukegan) வருகிறீர். திரும்பிச் சென்று, உம்முடைய இரவு ஆகாரத்தைச் சாப்பிடும். ஸ்திரீகளுக்குரிய கோளாறு: நீ சுகமடையப் போகிறாய் என்று விசுவாசிக்கிறாயா-? நான் உன்னிடம் ஒரு காரியத்தைக் கேட்க விரும்புகிறேன். நீ ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு, அங்கே பின்னால் அந்த நாற்காலியை விட்டு போன போது, ஏதோவொன்று சம்பவித்தது, இல்லையா-? இப்பொழுது, களிகூர்ந்து கொண்டே முன்னால் வீட்டிற்குச் சென்று, தேவனுக்கு நன்றி கூறி, போய்க் கொண்டு, சந்தோஷமாயிரு. 63. பெண்களுக்குரிய கோளாறு, கீல்வாதம், அநேக காரியங்கள் தவறாக உள்ளன. இயேசு கிறிஸ்து உன்னைச் சுகப்படுத்துவார் என்று நீ விசுவாசிக்கிறாயா-? என்னுடைய சகோதரியே, நானும் கூட அதை விசுவாசிக்கிறேன். பரலோகப் பிதாவே, நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் இந்த பெண்ணை ஆசீர்வதிக்கிறேன். மேலும் இப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் தாமே அவளிடம் சென்று, அவள் வேண்டிக் கொண்ட ஆசீர்வாதம் இயேசுவின் நாமத்தில் அருளப்படுவதாக. ஆமென். சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. களிகூர்ந்து கொண்டே உன் பாதையில் செல். 64. நீ விசுவாசிக்கிறாயா-? உனக்கும் எனக்கும் இடையில் இரத்தம் பாய்ந்து கொண்டே வருகிறது; அது வெண்மையாக மாறிக் கொண்டிருக்கிறது. நல்லது, அதற்குக் காரணம், உனக்கு சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை நோய் உன்னை குருடாகிப் போகும்படி செய்து கொண்டிருக்கிறது. நீ சர்க்கரை நோயிலிருந்து குணமாகி, உன்னுடைய பார்வையைப் பெற்றுக் கொள்ளும்படி வீட்டிற்குப் போகிறாய் என்று விசுவாசிக்கிறாயா-? நீ உன்னுடைய சகோதரனுடைய பிரசன்னத்தில் இருக்கவில்லை, ஆனால் அவருடைய பிரசன்னத்தில் நிற்கிறாய் என்று விசுவாசிக்கிறாயா-? என்னுடைய சகோதரனே, நான் உன்னை ஆசீர்வதித்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்தக் காரியத்தை உன்னை விட்டு ஓட்டுகிறேன். ஆமென். சந்தோஷத்தோடும், களிகூர்ந்து கொண்டும், உன்னுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்துக் கொண்டும் போ. நான் உன்னிடம் கூறியிருந்தால், நீ சரியாக அங்கே அந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த போதே சுகமடைந்து விட்டிருந்தால் என்னவாயிருக்கும், நீ அதை உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசித்திருப்பாயா-? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீ சுகம் அடைந்து விட்டாய். 65. எப்படியிருக்கிறீர்கள், ஐயா. நான்... என்று நீர் விசுவாசிக்கிறீரா-? ஒவ்வொருவரும் பயபக்தியாயிருங்கள்; சற்று பொறுங்கள். நீர் யாரோ ஒருவருக்காக இங்கேயிருக்கிறீர். அது உம்முடைய மனைவி. அவளுடைய முதுகில் ஏதோ தவறாக இருக்கிறது. அங்கே ஒரு முதுகெலும்பு கோளாறு இருக்கிறது. சரியாக அதோ உட்கார்ந்து கொண்டிருக்கிற, அந்த ஸ்திரீக்கு அவள் முதுகில் கீல்வாதம் இருக்கிறது, இடுப்பில் இளஞ்சிவப்பு நிறமாகக் காணப்படுகிறதை அணிந்து கொண்டு சரியாக அங்கே பின்னால் இருக்கிறாள். ஆமாம். ஆனால் அது உம்முடைய மனைவி அல்ல. ஆனால் உம்முடைய முதுகில் உமக்கு கீல்வாதம் இருக்கிறது, நீங்கள் நின்று கொண்டிருப்பதை என்னால் காண முடிந்தது, உமது முகமானது முழுமையாக இருக்கிறது. எனவே அங்கே உங்களுக்கு அடுத்து உட்கார்ந்து கொண்டிருக்கிற அந்த சீமாட்டிக்கும் கூட கீல்வாதம் உள்ளது. சரியாக உங்களுக்குப் பின்னால் இருக்கிற சீமாட்டிக்கு கீல்வாதம் உள்ளது, வெள்ளை நிறத்தில் இருக்கும் சீமாட்டி. அது சரிதானா, சீமாட்டியே-? மூவருமாகிய நீங்கள் எல்லாரும் எழுந்து நில்லுங்கள். போங்கள்... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது தான் அந்தப் பிசாசு உங்களை இழுத்துக் கொண்டு இருப்பதாகும். பாருங்கள்-? நீர் உம்முடைய மனைவி வித்தியாசமாக இருப்பதைக் காணப் போகிறீர். எந்தத் தொல்லையும் இல்லை. உமக்கு ஒரு மலக்குடல் கோளாறு இருக்கிறது, இல்லையா-? இப்பொழுது தேவனை விசுவாசித்தவாறே சென்று சுகமாயிருங்கள், என்னுடைய சகோதரனே. நான் உம்மை கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஆசீர்வதிக்கிறேன். ஆமென். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. 66. நீரிழிவு நோய் (Diabetes) என்பது ஒரு மோசமான காரியமாக இருக்கிறது. ஆனால் இயேசு கிறிஸ்து ஒரு சுகமளிப்பவராக இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் அதை ஏற்றுக் கொள்கிறீர்களா-? அப்படியானால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் போய் சுகம் அடையுங்கள். விசுவாசம் கொண்டிருங்கள். சிறு சிவப்பு நிற ஆடையை அணிந்து சரியாக அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிற அந்த கறுப்பின சீமாட்டி, அது அவர்கள் மேல் பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பது போன்று தோன்றுகிறது. உங்களுக்கு ஒரு ஜெப அட்டை இருக்கிறதா, சீமாட்டியே-? உங்களுக்கு இல்லையா, அல்லது உங்களுக்கு இருக்கிறதா-? உங்களிடம் ஜெப அட்டை இல்லை. கண்ணாடிகளை அணிந்து அங்கே பின்னால் இருக்கிற சீமாட்டியே, உங்களுக்கு ஜெப அட்டை இல்லை. உங்களிடம் ஜெப அட்டை இல்லாமல் இருந்தால், அப்படியே ஒரு நிமிடம் எழுந்து நில்லுங்கள். நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா-? இயேசு கிறிஸ்து உங்களைச் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறீர்களா-? உங்களுக்கு ஒரு அறுவை சிகிச்சை நடைபெறப் போகிறது. உங்களுக்கு அது தெரியும், இல்லையா-? உங்களுக்கு ஒரு சிதைந்து போன குடல்வால் (appendix) உள்ளது. அது சரி அல்லவா-? ஆனால் நீங்கள் அதை விசுவாசிப்பீர்களானால், இயேசு கிறிஸ்து உங்களைச் சுகப்படுத்துவார். அந்தப் பையன் மேல் உங்கள் கரத்தை வையுங்கள் - அங்கே உங்களுக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிற அந்த மனிதன், ஏனென்றால் அவன் நரம்பு சம்பந்தமான கோளாறினால் அவதிப்படுகிறவனாய், அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறான். கர்த்தராகிய இயேசுவின் மூலமாக, அதட்டுகிற அந்தப் பிசாசை நான் கண்டனம் செய்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இவர்களை விட்டு விலகு. ஆமென். ஆமென். 67. அந்த சீமாட்டியை அழைத்து வாருங்கள். ஓ, ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள், உங்களுடைய கர்த்தராகிய இயேசு இங்கே இருக்கிறார் என்று நீங்கள் உணரவில்லையா-? உங்கள் சகோதரன் அல்ல, ஆனால் உங்களுடைய இரட்சகர்... விசுவாசம் கொண்டிருங்கள். சீமாட்டியே, நாம் அந்நியர்களாய் இருக்கிறோம். அது உண்மை. சற்று நேரம் உங்கள் தலையைத் தாழ்த்துங்கள். கர்த்தாவே, உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில், இவள் மறுபடியுமாக நன்றாகவும் தெளிவாகவும் கேட்கக் கூடும்படியாக, இந்தப் பெண்மணியை விட்டு இந்த செவிட்டு ஆவியை எடுத்துப் போடுவீராக. சர்வ வல்லமையுள்ள பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் இந்தப் பிசாசை கடிந்து கொள்கிறேன்... ஆமென். சற்று பொறுங்கள். அப்படியே உன்னுடைய காது கேட்கும் தன்மையை சோதித்துப் பார்க்க விரும்புகிறாய். இப்பொழுது நான் கூறுவதை உன்னால் சரியாகக் கேட்க முடிகிறதா-? இப்பொழுது நான் கூறுவதைக் கேட்க முடிகிறதா-? காது கேட்பது உனக்குக் கடினமாக இருக்கிறது. நான் உன்னிடம் ஒரு காரியத்தைக் கேட்க விரும்புகிறேன். இன்றிரவு இந்த ஆராதனையை விசுவாசிக்கிறாயா-? இப்பொழுது, என்னால் இந்த பெண்மணியை தொடர்ந்து போகவிட முடியும். ஆனால் தொடர்ந்து ஏதோவொன்று என்னை அவளை நோக்கிப் போகச் செய்கிறது. அங்கே ஏதோ வித்தியாசமாக உள்ளது. சற்றே ஒரு நிமிடம் உன்னுடைய கரத்தை நாங்கள் பார்க்கட்டும். இல்லையா-? நான் அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறாயா-? எல்லா இருதயங்களின் இரகசியங்களும் அதைக் குறித்து எல்லாவற்றையும் அறிந்திருக்கிற தேவனுக்கு முன்பாக வெளிப்படையாக இருக்கிறது என்று விசுவாசிக்கிறாயா-? இந்த சூட் வஸ்திரத்தை எனக்குக் கொடுத்தவராகிய, இயேசு கிறிஸ்து, இன்றிரவில் இதை அணிந்து கொண்டு இங்கே நின்று கொண்டிருந்தால் நீ விசுவாசிப்பாயா-? சுகமளித்தலைப் பொறுத்தவரையில், அவர் உங்களை ஏற்கனவே சுகமாக்கி விட்டார். ஆனால் நீங்கள்.... என்னவாயிருக்கிறீர்கள் என்று அவர் அறிந்து இருப்பார். அந்த ஆழமான ஏதோவொன்று தான் உங்களுக்கு வாஞ்சையை உண்டாக்குகிறது. ஆமாம். உங்களுக்கு வயிற்றில் ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது. அது ஒரு வளர்ச்சியாக இருக்கிறது. அது சரிதானா-? அது மரித்து விட்டது. அது உங்களை விட்டுப் போய்விட்டது. உமக்கு அருகில் ஒரு சிறு பையன் நின்று கொண்டிருப்பதை நான் தொடர்ந்து காண்கிறேன், ஏதோவொன்று. ஓ, அது ஒரு சிறு பையன். நீர் ஒரு சிறு பையனை உம்மோடு வைத்திருக்கிறீர். மேலும்.... ஆனால் அது உம்முடைய பையன் அல்ல. அது உம்முடைய சிறு மருமகன். அது சரியே. அவனால்... முடியவில்லை. உம்மால் அவனைப் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை, ஏனென்றால் அவனுக்கு மோசமான தொண்டை சதை வளர்ச்சி உள்ளது. அது சரி அல்லவா-? போய், அந்தக் கைக் குட்டையை அவன்மேல் வையுங்கள். அவன் சுகமடைகிறான். 68. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? சரியாக இப்பொழுதே நாம் கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக் கொள்வோம். நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள்-? தெரிந்து கொள்ளப்பட்டு, அழைக்கப்பட்டு, அபிஷேகம் பண்ணப்பட்டு, கிறிஸ்துவுக்குள் பொருத்தப்பட்டு, கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் ஒன்றாக உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா-? அப்படியானால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் காலூன்றி எழுந்து நின்று, உங்கள் சுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். ஓ பரலோக தேவனே, நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஒவ்வொரு பிசாசையும் கடிந்து கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இவர்களை விட்டு வெளியே வா. *******